கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள் 4 Karkaviyin Kavithaigal 4

சிந்தனை 1000
***********
என்றோ ஒரு நாள் பெய்யும் மழைக்காக குடை வாங்கிவரும் அப்பாவின் அனுபவம் போல்
மனிதர்களுக்காக
மௌனக்குடைகளை பற்றியே திரிகிறது காலம்….

மணலோடு சேரும் பைஞ்சுரத்தின் இணைப்பிற்கு ஈடாவதில்லை
பாழாய் போன மனிதர்களும்..
பாலாய் போன குருதியும்…!

யாரென்று_தெரிகிறதா..!
*****************************
நான் யாரென
கண்டிப்பாக நீ அறியமாட்டாய்
உன் முன்னர் சென்றிருப்பேன்
உன் முன்னால் சென்றிருப்பேன்…!
யாரிடமாவது என் பெயர் புலப்பட்டிருக்கும்
எவராவது என்னை முனுமுனுத்துக் கொண்டே இருப்பார்….!

மௌனத்தில் என்னை
திட்டி தீர்த்திருப்பாய்
இருப்பினும் நான் யாரென்று தெரிய வாய்ப்பில்லை…!

கண்ணாடி மை ஒழுகு
கண்ணீர் துடைத்திருப்பாய்
துடைத்த விரல் ரேகையில்
நான் கண்டிப்பாக இருந்திருப்பேன்
காலம் என்று சொல்லி
வையித்து சென்றிருப்பாய்…!

செல்லிவிட்டுதான் போயென்றால்
இதோ சொல்லிவிட்டு
அடுத்த சிந்தனைக்கு
கூடு தாவுகிறேன்
நான்தான் உன் மனசாட்சி…!

அமைதியாக
நினைத்துபார்
நான்தான் – உன்
மனசாட்சி…!

சொற்பெயர்தல்
*******************
ஒவ்வொரு கவிஞனையும்
பார்த்துப் பார்த்து இடம்பெயர்கின்றேன்
ஏதோ கூறிச்செல்கிறான்
இயற்கையை வர்ணித்துச் செல்கிறான்
அவனின் அவளை ஏகபோகமாகக் காதலிக்கிறான்..!

சின்னதாக ஒரு லைக்
மொத்தமாகக் குத்தகையில் அருமை எனும் பாராட்டல்
முடிந்தால் ஈமோஜிகளின் அணிவகுப்பு
இத்தனையும் எங்கே போனது
எனது தேடலில் வந்து நிற்கிறது..!

கசக்கி எறியப்பட்ட
காகிதக் கருத்துக் குப்பைகளில்
பேனா மை நிறைந்த
கண்டும் திருப்தியில்லாமல்
நகரும் சொற்பெயர்தல்..!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.