கம்யூனிசம் தான் சிறந்த அரசியல் அது மற்ற கட்சிகள் போல் இல்லை அது ஒரு விஞ்ஞானம் மார்க்ஸ் ஒரு சமூக விஞ்ஞானி என்றெல்லாம் பலரிடம் வாதாடியிருந்தாலும் விரிவாக அதுகுறித்து விளக்க தெரியாது காரணம் அதுபற்றி ஆழ்ந்து வாசிக்காததால்.

காரல் மார்க்ஸ் விஞ்ஞானி என்றால் அவர் என்ன கண்டுபிடித்தார்..? தாமஸ் ஆல்வா எடிசனை போல் பல்பு கண்டுபிடித்தாரா..?
ரூதர்போர்டை போல் அணு மாதிரியை கண்டுபிடித்தாரா..? இல்லையெனில் பிறகு எப்படி அவர் அறிவியல் அறிஞராவர்…? அவருக்கும் அறிவியலுக்கும் உள்ள உறவு என்ன.? மார்க்ஸ் எப்படி மார்க்சியவாதியானார்..? இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறது ஜே.டி.பெர்னல் எழுதிய இந்த சிறிய புத்தகம்……

மார்க்ஸ் கண்டுபிடித்தது முதலாளிகளின் உற்பத்தியையும் இலாபத்தையும் பெருக்குவதற்கு உதவும் பொருள் சார்ந்த கண்டுபிடிப்புகள் அல்ல, அது “மனித சமூகம் பற்றிய அறிவியல்” அதுதான் கண்டுபிடிப்புகளில்லே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு அதன் வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியின் பின்னணியில் கூர்ந்து நோக்குவதும் கையாள்வதும் அவரது ஆரம்ப காலத்திய ஆய்வு கண்ணோட்டமாகும்..

Karl Marx - Mini Biography - Biography

அறிவியலின் சமூக பன்பையும் அதன் பொருட்டு அதன் சமூக தேவையையும் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியது அவரின் ஈடிணையற்ற பங்களிப்பாகும். முதலாளித்துவ அறிவியல் துறை முதலாளித்துவ சமூக பண்பை பெற்றிருக்கின்றன என்பதை நிறுவும் ஆய்வாகும்..

ஹெகலின் இயக்கவியல் தத்துவத்தில் ஈர்க்கப்பட்டு மனித குல வரலாறு என்பது வளர்ச்சி கட்டங்களின் தொடர்ச்சி எனும் அவரின் கருத்தை கற்றுக்கொண்ட மார்க்ஸ் அதை “கருத்து” தீர்மானிப்பதாக நம்பவில்லை அதற்கு மாறாக எதார்த்த உலகில் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகள் ஆகியவற்றின் வளர்ச்சியால் தீர்மானிக்கப்படுகின்றன என்றார். பிறகு கிறித்துவ வறட்டு வாதத்தை தைரியமாக எழுதிய பயர்பாக்கை வாசிக்க துவங்கினார் இப்படி பல சிந்தனையாளர்களின் சாதனைகள் எனும் அடித்தளத்தின் மீது தனது தத்துவ கோட்டையை கட்ட துவங்கினார் மார்க்ஸ். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை சில விமர்சனத்தோடு ஆதரித்தார் .

வரலாற்றில் வர்க்க போராட்டம் வகிக்கும் பாத்திரத்தை இயற்கை அறிவியலின் ஆதராமாக டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூல் இருப்பதாக கருதினார்….
கணிதம் பற்றி தன் கைப்பட 900 பக்கங்களை மார்க்ஸ் எழுதியிருக்கிறார் ஆனால் இதுவரை அது ரஷ்ய மொழியில் மட்டும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதாம்…
சோசலிச சமூக அமைப்பில் அறிவியல் துறை எப்படி இயங்கும் என்பதையும் மார்க்ஸ் எழுதியிருக்கிறார் அதை லெனினின் சோவியத் ரஷ்ய உள்வாங்கி வெற்றிகண்டிருக்கிறது….

மார்க்சும் அறிவியலும் - ஜே.டி ...

உயிரி உலகில் பரிணாம வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல மானுட வரலாற்றில் பரிணாம வளர்ச்சி விதியை கண்டுபிடித்தவர் மார்க்ஸ். இதுவரை சித்தாந்த புதருக்குள் சிக்குண்டிருந்த மானுடம் அரசியல் அறிவியல் மதம் கலை முதலானவற்றில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் உண்ணவும் பருகவும் இருக்கவும் உடுக்கவும் வேண்டும் எனும் மிக எளிய உண்மையை கண்டு பிடித்தவர் அவரே….
இப்படி மற்ற அறிவியல் அறிஞர்களை விட தனித்துவமான ஒரு சமூக விஞ்ஞானி தான் மார்க்ஸ்…

91 பக்கங்கள் தான் என்றாலும் ஒரு முறைக்கு இரு முறை படிக்க வேண்டும் ஒவ்வொரு வரியும் நுட்பானது ஆழ்ந்த அர்த்தங்ளை கொண்டது..

மார்க்ஸும் அறிவியலும்

முகம் வெளியிடு

தமிழில் அ.வெ.சாமிக்கண்ணு

மொழிப்பெயர்ப்பு

விலை 60…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *