காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி) karl marx puduyugathin valigatti
மார்க்சை ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்ற ஒவ்வொரு மனிதனின் கேள்விக்கும் விடை அளிக்கிற எளிமையான புத்தகம் தான் ‘காரல்மார்க்ஸ்-புதுயுகத்தின் வழிகாட்டி’ எழுதியவர் இ.எம்.எஸ்.
 மூலதனம் குழுவில் இணைந்து மூலதனம் வாசிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் எந்த புத்தகத்தை வாசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது காரல் மார்க்ஸ் புத்தகம் கிடைத்தது. இதற்கு முன் மார்க்சை வாசித்தாலும் மீண்டும் மூலதனம் புத்தகம் வாசிக்க தயார்படுத்தி கொள்ள மனதளவில் உற்சாகமூட்ட தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்ள வழிநடத்த என்றென்றும் மார்க்ஸ் நமக்கு தேவைப்படுகிறார்.
ஏனெனில் இந்த புத்தகத்தில் சொல்வதைப் போல  “‘ஏழைகளின் பைபிள் மூலதனம்”. மார்க்ஸின் தன்வரலாற்று குறிப்புகளை விட அதிகமாக இந்த புத்தகம் மூலதனத்தைப் பற்றியே அதிகஅளவில் மிகச் சிறப்பாக பேசுகிறது.
மார்க்சை எழுதக்கூடியவர்கள் பேசக்கூடியவர்கள் மூலதனம் பற்றி சிறு குறிப்பேனும் பேசாமலும், எழுதாமலும் அந்த இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டஎடுத்துக்காட்டே இந்த சின்ன சிறு நூல்.
முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி மனித சமுதாயம் முன்னேறுகின்ற ஒரு யுகத்தின் முழுமையான உயிர்த் துடிப்பையும் உட்கொண்டிருந்த அசாதாரணமான அறிவாற்றல் கொண்ட ஒரு சாதாரண மனிதனைக் காட்டிலும் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்த நிற்கின்ற ஒரு மேதையாக இருந்தார் மார்க்ஸ்.
ஏங்கல்ஸ் கூறியது போல “அவருடைய நாமம் யுக யுகாந்திரங்களுக்கு நிலைத்திருக்கும் – அவரது நூல்களும்”
“முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும் அதிலிருந்து கம்யூனிசத்திற்கும் சென்று கொண்டிருக்கிற மனித சமுதாயத்திற்கு அந்தப் பயணம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெளிவாகச் சொன்ன ஒரு தீர்க்கதரிசி மார்க்ஸ்” ஆவார்.
மேலும், இப்ப புத்தகத்தில் சில வரிகளை எடுத்துரைக்க வேண்டுமெனில் எல்லா வரிகளையும் நாம் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவுக்கு ஆழ்ந்த புலமையுடன் எழுதப்பட்டிருக்கிறது இச்சிறு நூல் ஆதலால் எனக்குப் பிடித்த சில வரிகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
“சிந்தனைக்கும் பொருளுக்கும் இடையில்,ஆன்மாவுக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள உறவு என்ன,இதில் எது முதலில் தோன்றியது – இதுதான் தத்துவஞானத்தின் குறிப்பாக நவீன தத்துவஞானத்தின் முன்னாள் உள்ள அடிப்படையான மிகப்பெரிய பிரச்சனை இதற்கு விடை காண முயற்சித்த தத்துவஞானிகள் இரண்டு முகாம்களாக பிரிந்தனர். ஆத்மா தான் முதலில் தோன்றியது இயற்கை அல்ல என்றும் பிரபஞ்சம் முழுவதும் அதற்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு சக்தியின் படைப்புதான் என்று நம்பியவர்கள் ஆன்மீகவாத முகாமில் அணிதிரண்டனர். இயற்கைதான்  முதலில் தோன்றியது என்று கருதுகிற மற்றவர்கள் ஏதாவது ஒரு விதமான பொருள் மூலமாக அணியிலிருந்துனர்.”
மாக்ஸும் பொருள் முதல்வாத அணிகளின் இணைந்து கொண்டு சிந்தனையின் அல்லது கருத்தின் தோற்றுவை கண்டறிய முடியவில்லை என்ற ஹெகலின் புரட்சிகரமான சித்தாந்தத்தை பொருள் முதல்வாத பிரபஞ்ச கண்ணோட்டமாக மாற்றி அமைத்தார்.
“முதலில் தோன்றியது இயற்கைதான்; அதனுடைய சக்திதான் சிந்தனை; ஆனால் சிந்தனை பிறந்த பிறகு – மனிதன் சிந்திக்கத் தொடங்கி விட்டால் – புற இயற்கையிலேயே மாறுதல்கள் ஏற்படுத்திக் கூடிய பல விதமான பணிகளுக்கு அது அஸ்திவாரமிடுகிறது; இப்பணிகளின் மூலமாக புற இயற்கையில் மாறுதல் ஏற்படுகிறது. மனிதனிலும் இப்பணிகளின் விளைவாக பல மாறுதல்களும் ஏற்படுகின்றன; இவ்வாறு சிந்தனையை உருவாக்கவும், அதில் உருவ வேறுபாடு ஏற்படுத்தவும், புற இயற்கையையிலும் உருவமாறுபாடு ஏற்படுத்தவும், சிந்தனைக்கு சாத்தியமாகிறது -இதுதான் மார்க்சிய இயக்கவியல் “.
மேலும் மூலதனம் பற்றி சரக்கு மதிப்பும், உபரி மதிப்பு, விஞ்ஞான முறை, லட்சிய நோக்கு கொண்ட தத்துவம், வர்க்கப் போராட்டம், முதலாளித்துவ நெருக்கடி, மார்க்சும் கெயின்சும், விஞ்ஞான சோசலிசம், தத்துவ விஞ்ஞானமும் வரலாற்று விஞ்ஞானமும், அரசும் புரட்சியும், மார்க்சியம்-லெனினியம் என்ற தலைப்பில் காரல் மார்க்ஸின் மிகச் சிறப்பான கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் இ.எம் எஸ்.
காரல் மார்க்ஸ் கூறியது போல  “இதுவரையிலான தத்துவஞானிகள் எல்லாம் உலகை வியாக்கியானிக்க மட்டுமே செய்துள்ளனர். நமது நோக்கம் உலகை மாற்றியமைப்பது”
அப்பணியில் தொடர்ந்து ஈடுபட  மார்க்சிய நூல்களை குறிப்பாக  சிவப்பு புத்தகங்களை தொடர்ந்து நாம் வாசிப்போம் பரவலாக்குவோம் அனைத்து மக்களிடம் கொண்டு செல்வோம்.

நூலின் தகவல்கள்: 

நூல்: காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி)
ஆசிரியர்: இ.எம்.எஸ் .நம்பூதிரிபாட்
விலை: ₹.20
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

அறிமுகம் எழுதியவர்: 

அமுதன் தேவேந்திரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *