கார்த்திகா கவிதைநான் அறிந்திருக்கிறேன்
நீங்கள் அணிந்திருக்கும்
போலியான உங்கள் முகக் கவசங்களை…

நான் அறிந்திருக்கிறேன்
என் முதுகுக்குப் பின்னால்
பேசிடும் உங்கள் வார்த்தைகளின் அடி நாதங்களை…

நான் அறிந்திருக்கிறேன்
உங்கள் சிரிப்பினில்
மறைந்திருக்கும் துரோகங்களின் கூர்வாட்களை…

நான் அறிந்திருக்கிறேன்
உங்களின் புகழுரைகளுக்குப் பின்னால் பறிக்கப்படும்
பள்ளங்களை…

அத்தனையும் அறிந்தும்
உங்களிடம்
சிறு புன்னகையை உதிர்த்தபடி கடந்து கொண்டிருக்கும் என்னைத்தான்
மனமுதிர்ச்சி அதிகம் கொண்டவர் என்கிறீர்கள்…

என் மனசாட்சியோ
ஏமாளி என்கிறது…

நான் முதலாவதை
மட்டும் மெய்யென
நம்பிக் கொண்டே
நடைபோடுகிறேன் நாளும்
எப்போதும் ஏமாளியாய்.

– கார்த்திகா.
Karthikapandiyan10gmail.com.