மன்னரை மக்களாக்கும்
மக்களும் மன்னராகும்
மாபெரும் திருவிழா…
வெறும்புள்ளிகளைப் பெரும்புள்ளிகளாக்கி
பெரும்புள்ளிகளெல்லாம்
வெறும்புள்ளிகளாக்கும்
விரலின் கரும்புள்ளிகள்
கொண்டாடும் வெற்றித் திருவிழா…
பாமரனும் ,படித்தவனும்
வரிசைகட்டி ஜனநாயகம்
பாடும் பண்பாட்டுத் திருவிழா…
ஆண்டுகள் ஐந்திற்கொருமுறை
ஆண்டான் அடிமைச் சமூகம் மாற்ற
அவசியமான அற்புதத்திருவிழா…
அடிப்படைத் தேவைகளை
அவரவரே செய்துகொள்ள
களம்புகும் கண்ணியத் திருவிழா…
விரல்களில் ஒளியேற்றி
விளக்கினை அரியணை
ஏற்றும்
விடியல் திருவிழா…
பதினெட்டு வயதான
குடிமகன்கள்
இந்தியத் தாய் போற்றும்
இளமைத் திருவிழா…
திருவிழா வில்
கரம் கோர்ப்போம்
தித்திப்பாய் மக்களாட்சி
மலர்ந்து மகிழ்வோடு வாழ்ந்திடுவோம்.
– காங்கேயம் கார்த்திகா.