கார்த்திகா கவிதைஅந்தரத்தில் மிதக்கிறது

திசையிழந்த பறவையின்
கூடொன்று…
தாகத்தில் கட்டுண்ட
அதன் அலகுக்கு
மேலாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன
சில
தண்ணீர்க் குடுவைகள்…
இரைப்பைக்கு வெளியே
எட்டிப் பார்க்கும்
அமிலவாசனையில்
அடைபட்டுக் கிடக்கின்றன
அதன் சிறகுகள்…
ஆனந்த பைரவி
பாடும் அதன்
முனகல்கள் யாவும்
முகாரியில் முடிகின்றன.,
இருந்தும்
முடிவிலியின்றித்
தொடர்கிறது
அதன் பயணம்.,
*இறகுகள் சருகாகும் வரை…*
– *கார்த்திகா