கார்த்திகேயன் செங்கமலை கவிதைடெல்லியில தண்ணீரு

அது
உழவனோட கண்ணீரு
உழுதவன் கையோ வெறுங்கையாம்
எடுத்தவன் பையோ பெரும்பையாம்
விலைக்கு வாங்குனவன் தூங்குறான்
உழைச்சவன் இங்கே ஏங்குறான்
வெள்ளைக்காரன் ஆட்சி போல
கொள்ளைக்காரன் வருவான் ஆள
விக்காது மாடுன்னு விலை
குறைச்சி வாங்குவான்
வேலை செய்யும் மாடுன்னு
விலையேத்தி சொல்லுவான்
நிலமெல்லாம் உன்னுது
உழைப்பெல்லாம் என்னுதுன்னு
கைநாட்டு வாங்கிபுட்டு
காலம் பூரா பத்திரத்தை
காட்டி காட்டி ஓட்டுவான்
பெரும் பெருச்சாளி கூட்டம்
அதனாலதானே இந்த காட்டம் …
உழவரோடு பேசு
வேண்டாம் உங்கள் காசு
உழவர் சுதந்திரம்
உலகில் உயர்தரம்
அடைக்காதே சட்டத்தில்
வதைக்காதே மொத்தத்தில்…
– கார்த்திகேயன் செங்கமலை