ஒவ்வொரு மாதமும்
உதிரமாகவே வெளியேறுகிறாய்
உன் வருகையை
எண்ணி ஏக்கத்துடன் …. காத்திருக்கிறேன்
மாதங்கள் கடந்து
வருடங்களை தொட்டுவிட்டது
சுற்றமும் சமூகமும்
வீசும் சுடுசொற்களோடு …. காத்திருக்கிறேன்
நாட்களை கடத்தாது
உன் வருகையே
என்னை முழுமையாக்கும்
வாய்ப்புக்காக …. காத்திருக்கிறேன்
உதிரப்பிண்டதிலிருந்து நீ
உயிர்ப்பித்து என்னை
உயிர்பிப்பாய் என்கிற
நம்பிக்கையோடு …. காத்திருக்கிறேன்
உன் “அம்மா“
அன்புடன்
அ.பா. ஆர்த்திமோகன்பாபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஒரு தாயின் உணர்வுகளை அப்படியே உயிர்போடு கவிதை. மனமார்ந்த வாழ்த்துகள் தோழர். மேலும் வளர்க
தாயாக வேண்டி நிற்கும் பெண்களின் வலி சொல்லிமாளாதது. சொந்த ஏக்கத்தையும் சுற்றத்தின் தூற்றலையும் எதிர்கொள்வது மிக கடினம்.
வலிகளை வரிகளில் கடத்திய தங்களின் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள் தோழர்..
சமூகத்தில் பெண்களின் வலியும் குடும்பத்தில் இணையர் வலியும் உணர்த்தும், உணரச் செய்யும் புனைவற்ற மெய்வழியான மெயான கவிதை.
அக்ற்கா்காலந்்தொட்டு தற்காலம் வரை சமூகத்தில் குழந்தை பேற்றை காரணம் காட்டி அநாவசியமான அழுத்தை பெண்களுக்கு தருகின்றனர்.
பெண்ணின் பிறந்தபலனாக அவள் மீண்டும் பிறந்ததாகவே கருதும் தருணம் அவள் மகவை ஈன்ற தருணம்.
காத்திருத்தல் ஒரு கொடை
பெறும் மகசூலில் வெளிப்படும்
காத்திருத்தலின் பலன்.
முயற்சிக்கு வாழ்த்துகள் தோழர்!
நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு தாயின்எண்ணச்சிதறல்கள். அருமையான கவிதை வாழ்த்துகள் தோழர்.