கரும்பலகைக்கு அப்பால் (Karumpalagaikku Appaal) – நூல் அறிமுகம்
கலவர வகுப்பறைகளை கலகல வகுப்பறைகளாக கலந்துரையாடும் நூல் இது.
24 தலைப்புகளில் கலந்துரையாடிய பக்கங்கள், பல பக்கங்கள் மனதிற்குள் இறங்கி, மற்றவைகளை நுழைய 144 தடை போட்டுள்ளது…
பாத்திரத்தின் வடிவத்தை தான், நீர் எடுத்துக் கொள்ளும் என்பதை நாம் மறந்து விட்டோம்.
நமக்கு பிடித்த பாத்திரமாக அதுவும், ஒரே மாதிரியான பாத்திரமாக மாணவர்களை பார்க்க முயல்கிறோம் என்று நூலாசிரியர் பதிவில் மாற்றுக் கருத்தில்லை.
மாணவர்களின் மனநிலையை அவர்கள் அருகில் நின்று படம்பிடித்து நம்மை வடமிழுத்து வர வைக்கிறது இந்த நூல்.
மாணவர்களின் கருத்திற்கும் கனவுகளுக்கும் காது கொடுத்து அவர்களுடன் கலந்துரையாடி மாற்றங்களை தொடங்காமல், நமக்கு பிடித்தவற்றை அவர்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மையே.!!
நான் சொன்னதை எழுதாமல் நீயே ஏதாவது எழுதுவியான்னு? முழங்கையில் அடிக்கும் ஆசிரியரும் உண்டு. முட்டிகளில் அடி வாங்கிய மாணவன் அழும் போது கலவர வகுப்பறை பிறப்பதும் உண்டு.
சார் என்று ஒரு விரல் நீட்டி எழுந்தான்….
போகக்கூடாது என அதிகாரம் எழுந்தது…
வகுப்பறை முழுவதும் அதிகாரம் நாற்றமாய் இருந்தது…..
என்ற கவிதை படித்த நினைவு….
தேர்வு பயத்திலிருந்து வெளியேற்றுவதற்கு *மொட்டுக்கா* என்ற படத்தை திரையிடும்போது….
_பிச்சுபுடுவேன் பிச்சு…_
என்று மாணவனின் நினைவில் வந்து _கணக்கு வாத்தியார் மிரட்டுவதாக உள்ளது._
நான்காம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு செல்லும் ஆறுமுகம் என்ற மாணவன், பரீட்சையில் பாசாகி ஐந்தாம் வகுப்புக்கும் சென்று விடுகிறான் .ஆனால் ஐந்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியரைப் பற்றி நண்பர்கள் சொல்லுவதை நினைத்து பயந்து கொண்டிருக்கிறான்
என்ற கதைத்துவக்கமாக இருப்பினும், பிச்சுபுடுவேன் பிச்சு வார்த்தை நம் பள்ளிப் பருவத்தை நினைவூட்டுகிறது.
விடுமுறை நாட்களில் விளையாடாமல் கூட பதட்டமாக இருக்கும் ஆறுமுகத்தின் ஐந்தாம் வகுப்பு முதல் நாள் அனுபவத்தோடு படம் முடிந்தது.
உங்க மனசுக்கு பிடிச்ச பள்ளி எப்படி இருக்கனும்னு???
என்ற கேள்விக்கு :
பள்ளி வளாகத்தில்
நிறைய மரங்கள்
இருக்கணும்,
வகுப்பறை
கண்ணாடியால்
ஆனதாக இருக்கணும்,
புத்தகங்களில் அதிக
பாடம் இருக்க கூடாது,
வாரத்துக்கு ஒரு நாள்
கலர் டிரஸ்,
சனி ஞாயிறு என்று
இரண்டு தினம் லீவு
விடாமல், புதன்
ஒருநாள்- ஞாயிறு
ஒரு நாள் என்று லீவு,
மாலை 3 மணியோடு
பள்ளி முடிச்சிரணும்.
நீச்சல் குளம்
இருக்கணும்
போட்டிகளில்
எல்லோருக்கும்
வாய்ப்பு அளிக்கணும்
திட்டவே கூடாது
நாங்க தவறு செஞ்சா
எடுத்து சொல்லுங்க
எனக் குழந்தைகள் மனம் திறந்து பேசுவதை நெகிழ்ந்து பதிவிட்டு இருக்கிறார்..
இன்னா செய்தாரை ஒறுத்தல்என்ற தலைப்பில்:
மாணவர்களுக்குள் சிறு சண்டைகள் வரும் பொழுது பஞ்சாயத்திற்கு ஆசிரியர்கள் நுழைந்து, இவனை ஏன் அடித்தாய்??என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு, கடுமையான வார்த்தைகளால் திட்டுவதால் பலனில்லை.
நாம் சொல்லில் காட்டியதை, குழந்தை செயலில் காட்டுகிறது
இருவரும் ஒரே ரகம் தான். ஆனால் அவர்கள் குழந்தைகள் நம்மால் திருத்தப்பட வேண்டியவர்கள் என்று கூறியவர்…
விடாது குலைக்கும் நாய் தலைப்பில்… ( The dog)அன்பு பற்றி அருமையாக எழுதியுள்ளார்.
தலையாட்டக் கற்றுத் தருவதல்ல கல்வி.
ஆண்களுக்கான அவளதிகாரம்
மகிழ்ச்சி பொங்கும் தோல்வி
பள்ளிக்கூட நிழல்
ஒரே மாதிரி இருக்க
தேவையில்லை
போன்ற தலைப்புகள் என் மதிய உணவு வேலைக்கு இடைவேளை விட்டுள்ளது..
கரும்பலகைக்கு அப்பால் என்ற நூல் கலகல வகுப்பறையை அருகில் கொண்டு வந்துள்ளது.
நூலின் தகவல்கள் :
நூல் : கரும்பலகைக்கு அப்பால்
நூலாசிரியர் : கலகல வகுப்பறை சிவா
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : ₹63
நூல் அறிமுகம் எழுதியவர் :
யாழ்.மாரி
கும்பகோணம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.