கருணாநிதி மாஸ்டர் எழுதிய "மேற்கு தொடர்ச்சி மலை" 100 வினாக்களும் விடைகளும் | Karunanidhi Master's Merku Thodarchi Malai 100 Vinakkalum Vidaikalum Book Review | ரெ.த. ஆனந்தி குமாரி | www.bookday.in

கருணாநிதி மாஸ்டர் எழுதிய “மேற்கு தொடர்ச்சி மலை” 100 வினாக்களும் விடைகளும் – நூல் அறிமுகம்

மேற்குத் தொடர்ச்சி மலை: 100 வினாக்களும் விடைகளும் என்ற நூல், இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை அரணாகவும், உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் ஒன்றாகவும் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றிய ஒரு சிறந்த விழிப்புணர்வு மற்றும் தகவல் கையேடாகும்.

மேற்கு தொடர்ச்சி மலை 100 வினாக்களும் விடைகளும் என்ற நூலின் பெயருக்கேற்றவாறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புவியியல் அமைப்பு, அங்கு வாழும் அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் என அனைத்தையும் 100 எளிமையான, சுவாரசியமான வினா-விடைகள் வடிவில் இந்நூல் விளக்குகிறது.

புவியியல் வரலாறு:

இந்நூலில் குறிப்பிட்டுள்ள நூறு வினாக்களும் விடைகளும் சிறப்பானவை. மேற்குத் தொடர்ச்சி மலையின் புவியியல் வரலாறு, மலையின் அமைவிடம் , உயரமான மலைகள் விவரங்கள் பற்றி விளக்கி கூறப்பட்டுள்ளன.

பல்லுயிர்ப் பெருக்கம் (Biodiversity): இம்மலைக்கே உரிய (Endemic) பிரத்யேக உயிரினங்களான வரையாடு, கருமந்தி போன்ற வாலுடைய குரங்கு (Lion-tailed Macaque), மற்றும் அரிய வகை மரங்கள், மூலிகைகள் பற்றிய குறிப்புகள். புல்வெளிகள், காப்புக் காடுகள் பற்றிய தகவல்கள் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளன.

நீர் ஆதாரங்கள்: தென்னிந்தியாவின் வாழ்வாதாரமாக விளங்கும் காவேரி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகளின் பிறப்பிடம் இதுவே என்பதை விளக்கும் பகுதிகளும் முக்கிய ஆறுகளின் கிளை ஆறுகள் பற்றிய விவரங்களும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளின் விவரங்கள் மிக அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: காடழிப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆக்கிரமிப்புகளால் இந்த மலைத்தொடர் சந்திக்கும் ஆபத்துகள் மற்றும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வினாக்களும் விடைகளும் அளிக்கப் பட்டிருப்பது மிகச்சிறப்பு. புலிகள் காப்பகங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது..வன விலங்குகளின் வலசைப் பாதை என்பதற்கான விளக்கமும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள யானை வலசைப்பாதை அல்லது வழித்தடங்கள் பற்றிய வினாவில் மிக விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் தான் அதிகளவு யானை வழித்தடம் அமைந்திருக்கிறது என்பதற்கான விளக்கப் படங்கள் வழங்கப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது.

யானை வழித்தடம் அதிகமுள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையைப் பற்றி எழுதியிருக்கும் ஆசிரியர் கருணாநிதி பாராட்டுக்குரியவர். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மிக குறைந்த விலையில் தரமான நூல்களை அச்சிட்டும் பல்வேறு எழுத்தாளர்களை அறிமுகம் செய்தும் வருகிற பாரதி புத்தகாலயம் இந்நூலினை அழகாக வடிவமைத்து அச்சிட்டுள்ளது. இந்த நூல் போட்டித் தேர்விற்காக மட்டுமல்ல. காவேரி, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் நீர்வரத்து வேண்டு மெனில் மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாக்க மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளடக்கத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டு பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை இந்நூல் வழங்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை!

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“மேற்கு தொடர்ச்சி மலை” 100 வினாக்களும் விடைகளும்
ஆசிரியர்:​ கருணாநிதி மாஸ்டர்
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை:Original price was: ₹.150.00. 10% Discount price was:
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 ரெ.த. ஆனந்தி குமாரி

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *