கருப்பழகன் – புத்தக விமர்சனம் | கருணாகரன்

கருப்பழகன் – புத்தக விமர்சனம் | கருணாகரன்

#Bookday
படித்ததில் ரசித்தது

கருப்பழகன் நாவல்…
கதைக் காட்சிகள் மனதில் திரைக்காட்சிகளாகி..மனத்தின் வழியே ரசிப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது .

குழந்தை பருவத்தில் வெட்கப்படும் குழந்தை (குதிரை )மீது திணிக்கப்படும் அடக்குமுறை அதன் வளர்பருவத்தில் அதனை பயந்தாங்கொள்ளியாக மாற்றுகிறது

குழந்தை பருவத்தில் கோபப்படும் குழந்தை மீது திணிக்கப்படும் அடக்குமுறை அதன் வளர்பருவத்தில் அதனை வன்முறையாளனாக மாற்றுகிறது

இவ்விரு குழந்தைகள் மீது அன்பு காட்டி வளர்க்கப்பட்டால் அவர்கள் மரியாதைக்குரியவர்களாகவும் அன்பானவர்களாகவும் வளர்கிறார்கள் …இது கதையின் போக்கில் ஒரு குதிரை வளர்ப்பவனால் உதிக்கப்படும் கருத்து

ஒரு குதிரை தன் சுய வாழ்க்கையின் அடிமைத்தன நடந்தேரிகளை அடிமை வாழ்க்கையின் அவமானங்களை காட்சியாளனின் கண்முன்னே கொண்டுவந்து நிருத்துவதுபோல் சொல்லும் விதமாக …தன் உணர்வுகளை காட்சியாலனின் உணர்வுகளாக மாற்றக்கூடிய தனித்துவம் .. இதன் கதை எங்கும் விரவிக்கிடக்கிறது ..

ஒரு அடிமையின் வாழ்க்கையை எடுத்துரைப்பதுபோல் சொல்லப்படுவது ..நம் நிகழ்காலத்தில் தலித்திய நாவல்களில் அடிமை முறையோடு அவர்கள் பட்ட இன்னல்கள் அதனுடன் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போன்ற உணர்வு நம் முன்னே விரிகிறது

“அறியாமையால் செய்யப்படும் தவறுகள் மிகப்பெரிய கொடுமையான விளைவுகளுக்கு காரணாமாகின்றன ”

“எப்படியாவது நம்மால் தடுக்க முடிகிற ,அல்லது தீர்க்க முடிகிற கொடுமைகளைப் பார்த்தும் நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் ,அந்தக்கொடுமையில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதுதான் என் நம்பிக்கை “—இது கதையில் ஒரு குதிரை தாக்கப்படும்போது அதனை தடுக்காமல் இருக்ககூடாது என்ற வகையில் கூறப்படுகிறது ….இதனை நம் வாழும் சமுதாயத்தில் நாம் தடுக்காத குற்றங்களுக்கு நாமும் காரணாகர்த்தாக்களே …

#பாரதி புத்தகாலய வெளியீடு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *