கருப்பு அன்பரசன் (Karuppu Anbarasan) எழுதிய ராசாத்தி (Rasaathi) - நூல் அறிமுகம் | Poetry Book Review - https://bookday.in/

ராசாத்தி (Rasaathi) – நூல் அறிமுகம்

ராசாத்தி (Rasaathi) – நூல் அறிமுகம்

ராசாத்தி என்ற புத்தகத்தை எழுத்தாளர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதியுள்ளார். பொதுவாக எனக்கு கவிதை வாசிக்கும் பழக்கம் குறைவாக இருந்தது. தோழர்.கருப்பு அன்பசரன் சமீபமாக பேஸ்புக்கில் எழுதும் கருத்துகள் குறித்து கவனித்து வருகிறேன். அதில் ராசாத்தி (Rasaathi) புத்தகம் குறித்து சென்னை புத்தக கண்காட்சியில் பதிவுகள் செய்திருந்தார். சரி அப்படி என்ன? ராசாத்தி (Rasaathi) சொல்கிறாள் பார்ப்போம் என்று வாங்கினேன்.

அன்பு, நேசம், காதல் என்று சொல்லிக்கொண்டே கவிதைகள் நகர்ந்துகொண்டு சென்றிருக்கும். நிறைய இடங்களில் தேநீர் அருந்தலாம் என்று காதலியிடம் கேட்பதுபோல் என்ற உணர்வை எழுத்தாளர் கொடுத்திருக்கிறார்.

“போரும் காமமும்
ஒன்றுதான காதலில்”

என்று எழுத்தாளரின் வரிகள் நிறைய சிந்திக்க வைத்தது. சிறு சிறு ஊடல்கள் கூட காதலில் பேச வைக்கும். ராசாத்தின் ஒவ்வொரு பக்கமும் என்னை நிறைய சிந்திக்க வைத்தது என்று கூறலாம்.

போராட்டக்
களங்கள் தான்
நம் காதலின்
பூங்காக்கள்

முழக்கங்களும்
கொள்கைகளுமே
நாம் பகிர்ந்து கொள்ளும்
குறுஞ்செய்திகள்

வாழ்வோம்
வாழ வைப்போம்
ராசாத்தி

அவளுக்காக நான்
காடு வளர்க்கிறேன்
ஆம்
காதல்
என்பது பொதுவுடைமை

என்று எழுத்தாளரின் வரிகள் முற்போக்கு கருத்துகள் கவிதைகளில் இருப்பதை காண முடிந்தது. காதல் எங்கு இருந்தும் தொடங்கலாம் போராட்டக்களமும் அதில் இருக்கிறது என்று புத்தகம் உணர்த்துகிறது.

இன்று நிறைய வரிகள் தேநீர் கடையில் நின்று கொண்டு பேசுவதுபோல், பிரிந்து செல்லும் ராசத்தின் நினைவுகளில் உதடுகள் இருக்கும் மச்சம். பெருங்கோபமும் காதலும் நிறைய காதலின் ஊடல்கள் நிறைந்து இருக்கிறது எழுத்தாளர் கருப்பு அன்பரசன் கவிதை வரிகளில் அழகாக நிமிர்ந்து நிற்கிறது.

பேரன்பு
பெருங்காதல்
பிரியம்
நேசம்
மகிழ்ச்சி
இன்பம்
துயரம்
வலி
சோகம்
ராட்டசசி
சண்டக்காரி
ராங்கி
திமிர்
கெத்து
செம்பருத்தி
பிச்சிப்பூ
காட்டு மலர்க் கொத்து..

என்று காதலிக்கு பெயர் வைத்த எழுத்தாளரின் காதல் எவ்வளவு அழகானது. இதை படிக்கும்போது காதலின் உணர்வுகள் எந்த அளவுக்கு மனிதர்களுக்குள் பயணம் செய்கிறது என்று புத்தகம் விளக்குகிறது.

பேரன்பு பெருங்காதலோ
காதல் என்னும்
பொதுவுடைமை சமூகத்தில் பரவட்டும்
ராசாத்தி.

தோழர். கருப்பு அன்பரசனின் காதலின் வலிகள் கவிதைகளாக இருக்கிறது என்று நினைத்து முடிக்கிறேன்.

வாழ்த்துகள் தோழனே

 

நூலின் தகவல்கள் :

நூல் : ராசாத்தி (Rasaathi)
ஆசிரியர் : கருப்பு அன்பரசன்
விலை -100
பக்கங்கள் : 74
வெளியீடு : வேரல் புக்ஸ்
தொடர்புக்கு : 95787 64322

நூல் அறிமுகம் எழுதியவர் : 

சு.வினோத்குமார்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. அழகர்

    மனநிலை மற்றும் மனநிம்மதி
    தலைப்பை படித்த உடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *