எனக்கு மிகவும் பிடித்த ஒரு வகைமை புராண மறுவாசிப்பு. எனினும் தமிழில் மறுவாசிப்புகள் அதிகம் கிடையாது. எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி, அகலிகை முதலிய அழகிகள் தொகுப்பு, அருணனின் பூருவம்சம், எஸ்.ராவின் உப்பாண்டவம், ப.ஜீவகாருண்யனின் கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய படைப்புகள் தான் இந்த வகைமையில் வந்துள்ளன. அப்படியான படைப்புகளில் ஒன்று தேவகாந்தனின் கதா காலம்.
எல்லா மறுவாசிப்புகளையும் போலவே இதுவும் மகாபாரத மறுவாசிப்புதான். பொதுவாக மறுவாசிப்பு என்றால், இதிகாசத்தின் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வது, அல்லது ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்வது. அதை மறுவாசிப்பிற்கு உட்படுத்தி எழுதுவது என்பது தான் வழக்கம். ஆனால், தேவகாந்தன் இந்த நாவலில் மகாபாரதம் முழுவதையுமே மறுவாசிப்பாக எழுதியுள்ளார். அதுவும் 152 பக்கத்தில். பெரிய சாதனைதான்.
எழுத்தாளர் தேவகாந்தன்
நாவலின் அற்புதமான மயக்கும் மொழியில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கதைசொல்லிகள் மக்களுக்கு வாய்மொழியாக பாரதக் கதையைச் சொல்வது போல் தொடர்ச்சியாகச் சொல்லிச் செல்கிறார். மூலக்கதையை முழுவதுமாக அறிந்தவர்களால் மிகவும் ரசிக்க முடியும். எனினும் மற்றவர்களுக்கும் புரியும். தெரிந்த கதை என்பதால் கதை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை மிகவும் கவர்ந்த தேவகாந்தனின் மொழியில் நாவலில் நான் அடிக்கோடிட்டு வைத்திருக்கும் ஓரிரு வரிகளை மட்டும் இங்கே தருகிறேன்.
“மகனின் இளமையைக் கொண்டு காம இச்சைகளைத் தணிக்க ஓடிவந்த யயாதியை, சர்மிஷ்டை யாராக உணர்ந்திருப்பாள்? பெரியன்னையாகிய தேவயானிகூட எவராய்ப் பாவித்திருத்தல் கூடும்?“
“வாக்கு என்பது வெறும் ஒலித்திரளாக மட்டும் நிற்பதில்லை. அதுவே சத்தியம்.“
“அத்தினாபுர அரண்மனை பல பெண் இதயங்கள் வெளிப்படுத்திய துக்கங்களதும், விரகங்களதும், கோபங்களதும் குமுறும் நிலைக்களனாயே காலகாத்துக்கும் இருந்து வந்திருக்கிறது. ஒருபோது சத்தியவதி, அம்பிகா, அம்பாலிகா, பின்னாள் காந்தாரி, குந்தி. அதன் பிறகு துரியோதன்ன் மனைவி பானுமதி.“
“பூவுலகில் பொய் பிந்தித் தோன்றியதில்லை. அதன் ஜன்னம் உண்மை பிறந்த அதே கணத்திலேயே நிகழ்ந்த்து. அநீதி, நீதியின் முன்னதாக்க் கூடத் தோற்றம் பெற்றிருக்க்க் கூடும். கொடுமையும், கருணையும் ஒரு செப்புக்காசின் இரு புறங்கள் போல் ஒருபுறம் மனித அடையாளமாகவும், மறுபுறம் சமூகத்தின் அவசியமாகவும்.”
கொடுமை, கருணை பற்றிய இந்த ஒரு வரி போதும் எனக்கு.
நூல் விபரம் –
கதா காலம்
தேவகாந்தன்
நற்றிணை பதிப்பகம் விலை ரூ.125.00
பொதுநலன் கருதி இதை எழுதியவர் பெயரைக் குறிப்பிடலாமே?
I really liked this post! Nice article I visit your blog often and
you’re always coming up with some great stuff. I posted
this on my FB page and my followers loved it! Keep up the good
work. 🙂