இ.பா.சிந்தன் (E. P. Chindan) எழுதிய கதை சொல்லிகளின் கதைகள் (Kathaisolligalin Kathaigal) - நூல் அறிமுகம்- பாரதி புத்தகாலயம் - https://bookday.in/

கதை சொல்லிகளின் கதைகள் (Kathaisolligalin Kathaigal) – நூல் அறிமுகம்

கதை சொல்லிகளின் கதைகள் (Kathaisolligalin Kathaigal) – நூல் அறிமுகம்

அறுபத்து மூன்று பக்கமே கொண்ட மிகச் சிறிய நூல். ஆனால் மிகப்பெரிய கதை சொல்லிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கிய பொக்கிஷமாக இருக்கும். ஆங்காங்கே எழுத்தாளர் குழந்தைகளுடன் பேசுவார். பெரியவர்களும் இந்நூலை வாசிக்கும்போது இந்நூலில் ஒன்றிப் போவார்கள். ஐந்து வயதிலேயே ஒரு குழந்தை எழுத்தாளராக மாறிவிடுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும் தானே. குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவ்வாறு எழுத்தாளர்களாக மாறினார்கள்; கதை சொல்லிகளாக மாறினார்கள் என்பதை உலகின் 16 முக்கிய ஆளுமைகளை இந்நூலில் வழங்கியிருக்கிறார்.

நூல்களை எழுதிய ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் எப்படி, எங்கே உருவாகின என்பது மிகவும் சுவாரசியமாக செல்லும். நூலை எடுத்தால் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். பின்பு நாமும் எழுத்தாளராக மாறுவதற்கான வாசலையும் திறந்து காட்டுகிறார். கடல் அலைகள் நமக்கு இப்போது கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் ஆங்காங்கே தூண்டில் வளைவுகள் என்கிற பெயரில் கொட்டப்படும் கற்களால் இயல்பாக உருவாக வேண்டிய மனற்பரப்பு காணாமல் போய்விடும்.

மாறாக இயல்பாக வாழ்ந்து வளர்ந்த ஆப்பிரிக்க குழந்தை ஒன்று கடல் அலையில் நின்று அது தன்னை மோதவிடாமல் இருக்க போராடிய காட்சியை தன் ஐந்து வயதில் எழுதி தாய் தந்தையரிடம் காண்பித்து தாய் தந்தையர் அவற்றைப் பத்திரமாக அலமாரியில் வைத்து, பெற்றோர் அவற்றை கண்டுகொள்ளாதபோது குழந்தை கோபித்துக் கொள்ள பெற்றோர் அப்போது தான் மீண்டும் எடுத்து பார்க்கிறார்கள் மூன்று கதை இதற்குள் எழுதிவிட்டார். எழுதி முடித்தபோது அவருக்கு வயது ஆறு. ஆச்சரியப்பட்ட பெற்றோர் அதை நூலாக வெளிக்கொண்டு வருகிறார்கள். மிகப்பெரிய பிரபலம் அடைந்தார். தனது 13 வயதில் பள்ளிகளில் குழந்தைகளுடன் கதை சொல்லியாக மாறினார் ஆப்பிரிக்கச் சிறுமி மிசல் கமென்கெங்.

அப்புறம் ‘குட்டி இளவரசன்’ அதாங்க பாரதி புத்தகாலயத்தில் அந்துவான் எக்சுபெரி எழுதிய நூலை தமிழில் யூமா வாசுகி அவர்கள் மொழிபெயர்த்த நூலை இதோ கையில் எடுக்க வைத்து விட்டார். உலகின் 345 மொழிகளில் வெளியான நூல் அது. அந்துவான் எக்சுபெரி ‘குட்டி இளவரசன்’ நூலை ஏன் எழுத வேண்டும் என்பதற்கான கதையை கொடுத்துள்ளார்.

இது சிறு துரும்பு மட்டுமே. இன்னும் இது போன்று 14 வரலாற்று பொக்கிஷங்கள் இந்நூலில் உள்ளன. நாமும் எழுத்தாளராக மாற வேண்டுமா. உற்சாகத்துடன் இந்நூலை வாசிக்கலாம். இந்நூல் குழந்தைகளுக்கு என்று இருக்கும். பெரியவர்களும் குழந்தைகளாக மாறி வாசித்து எழுதுவதற்கு எந்த வயதும் தடையில்லை என்று அறிந்து எழுத்தைத் தொட்டுப் பார்க்கலாம். உலகின் எழுத்தாளர்களை, வாசிப்பாளர்களைத் தேடித் தேடி கொடுக்கும், என்னாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கையை எனக்கும், எல்லோருக்கும் கொடுத்த அன்புத் தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்நூலை படித்தபோது நானும் குழந்தைதான் என்று இந்நூலின் இளைஞருக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூலின் தகவல்கள் : 

நூல் : கதை சொல்லிகளின் கதைகள்
இப்படித்தான் எழுத்தாளர் ஆனாங்களா?
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
பாரதி புத்தகாலயம்
ஆண்டு : முதல் பதிப்பு ஜூலை 2024
விலை : ரூ. 65
நூலைப் பெற : thamizhbooks.com

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

இரா. சண்முகசாமி
புதுச்சேரி.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *