கதவிடுக்கில் நசுங்கும் இருள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூலின் பெயர் : கதவிடுக்கில் நசுங்கும் இருள்
நூலாசிரியர் : மூ. மணி திருமுருகன்
நூலின் விலை : ரூ.80
நூல் வெளியீடு : அகநி வெளியீடு
நூல் வாங்க : 88833 33466.
நூலாசிரியர் மணி திருமுகன் அவருக்கு இது இரண்டாவது புத்தகம் கதவிடுக்கில் நசுங்கும் இருள் புத்தகத்தின் தலைப்பே நமக்கு ஒரு ஜென் உணர்வை உணர்த்துகிறது .. நூலுக்கு அணிந்துரை கலாப்ரியா அவர்களும் வாழ்த்துரை மு.முருகேஷ் அவர்களும் தந்து புத்தகத்தை செழுமை படுத்தியுள்ளனர் ..
வளையல் கேட்ட மகள்
ஞாபகப்படுத்தியது
ஊருணி நீர் ..
தந்தை மறந்த வேளளையில் வளையல் கவிதை வழியே வந்து ஞாபகப்படுத்திவிட்டது இப்படி எழுத கவிஞர் எப்போதும் கவிதையிலே ஊறிக்கிடப்பதை நன்றாக வளையமிட்டு காட்டுகிறது அவருடைய கவிதை.
தூவானம்
மையம் கொள்கிறது
குஞ்சுகளோடு கோழி.
தூறுகின்ற வானத்தை அடைக்காக்கும் கோழி நனைத்துவிடுகிறது நம் மனதை ..
சிறாரின் உண்டியல்
பண்டிகையை
எதிர்ப்பார்த்தபடி
அப்பா.
இந்த கவிதையை படிக்கும்போது
நெருங்கும் பண்டிகை
உடைகிறது
குழந்தைகள் சேமித்த உண்டியல் ..
என்ற கவிதை தான் நினைவிற்கு வருகிறது ஆடி மாதம் பிறந்ததும் ஆடி பதினெட்டாம் பெருக்கு முருகன் கோவிலுக்கு செல்ல நாங்கெல்லாம் வேப்பங்கொட்டைகளை சேகரித்து விற்ற பணத்தை உண்டியலில் சேமித்து அந்த பணத்தை திருவிழவாவில் செலவு செய்வோம் . என் வாழ்வியலை நினைவுபடுத்திய கவிதை ..
கதவு இடுக்கில்
நசுங்கிப்போனது
படர்ந்த இருள் ..
எங்கே அந்த கவிதை என தேடி தேடி படித்துக்கொண்டிருக்க 48 வது கவிதையில் கிடைத்துவிட்டது ..இந்த கவிதை நன்கு ஆழ்ந்து சிந்தித்தால் பல பொருள் விளங்கும் ..
நண்டு பிடிக்கப்போய்
தொலைந்துப்போனது
மோதிரம்
மூடி மறைத்தது நதி …!
இந்த கவிதையை படித்ததும் உங்களுக்கும் இதுபோல நடந்த அனுபவம் இருக்கும் ..
பரந்த மரத்தின் நிழலில்
சிக்கனமாகப் படுத்து
உறங்கும்
நாய் …
மனிதன் தான் பெரும் செல்வத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறான் நாய் உறங்குவதற்கு அந்த இரண்டடி நிலமே போதுமானதாய் இருக்கிறது .. இதை தான் ஜென்னும் சொல்கிறது ..
ஊர்க்குளத்தில்
பாகுபாடு பார்ப்பதேயில்லை
பறவைகளும் விலங்குகளும் …
பாகுபாடு பார்க்காத கவிதை இது .. கவிஞர் இன்னும் பல கவிதைகளை பாகுபாடின்றி படைத்திட வாழ்த்துகள் ..!
நூல் அறிமுகம் எழுதியவர் :
கவிஞர் ச. இராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

