கதிர் சக்தி (கதிரேசன்) எழுதிய “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” புத்தகம் | Kathir Sakthi's Ringring Tamil Book Review | தி.தாஜ்தீன் | www.bookday.in

கதிர் சக்தி எழுதிய “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம்

“ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம்

புத்தகம் வாசிப்பிலிருந்து தொடங்கும் அறிவு,ஆசிரியரின் வழிகாட்டுதலால் வளர்ந்து, தொழில்நுட்பத்துடன் இணைந்து, இயற்கையையும் மனிதநேயத்தையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்”என்பதே இந்த நூலின் மையச் செய்தியாகும்.

நூலாசிரியர் திரு. கதிரேசன் அவர்கள் நல்லாசிரியர், தீவிர வாசகர்,நூல் விமர்சகர் போன்ற சிறப்பு தன்மைகளை கொண்டவர். இப்போது ஒரு படைப்பாளியாக உருவாகி அவருக்குள் நிகழ்ந்த பரிணாமம்,ஆழ்மனதில் தேங்கி கிடக்கும் சிந்தனைகளையும், கருத்துக்களையும் சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தேர்ந்தெடுத்த பத்து சிறுகதைளை மிக நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் படிக்கும் போதே சுவாரசியமாகவும் கதைகள் அனைத்தும் அமைந்துள்ளது.

“ரீங்ங்ங்” நூலுக்கு பெருமை சேர்க்கும் வண்ணமாக மதிப்பிற்குரிய நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா சிவக்குமார் அவர்களின் வாழ்த்துரையும், முன்னாள் தலைமை ஆசிரியை பேரன்புக்குரிய நல்லாசிரியர் அல்லி அம்மா அவர்களின் வாழ்த்துரையும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பை கொண்டுள்ளது.

மனிதன் உணவின்றி சில நாட்கள் வாழ முடியும். நீரின்றி சில நாட்கள் தாங்க முடியும்.ஆக்சிஜன் இன்றி சில நிமிடங்கள் கூட உயிர் நிலைக்காது. ‘Every Breath Matters’ என்பது ஒரு வாசகம் மட்டுமல்ல; ஒவ்வொரு மூச்சும் ஒரு உயிரின் நம்பிக்கை, ஒரு குடும்பத்தின் எதிர்காலம், ஒரு தாயின் பிரார்த்தனை. ஆக்சிஜனைப் பாதுகாப்பது மருத்துவத்தின் கடமை மட்டுமல்ல; மரங்களை வளர்த்து, சுற்றுச்சூழலைக் காக்கும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஆகும் என்பதை சமூக அக்கறை கொண்டு எழுதிய “உயிர் வ(லி)ளி” கதை அருமை.

பெயிண்டிங் வேலை பார்க்கும் சுந்தரம், பட்டாசு ஆலையில் வேலை செய்த தன் மனைவி திடீர் விபத்தால் அங்கேயே உயிர் போய்விட்டது. அம்மா இல்லாத உணர்வை போக்கி, மனதில் லட்சியம் கொண்டு தன் மகளை புற்றுநோயிலிருந்து காப்பாற்றி சிறப்பான வாழ்வை கொடுக்க தினமும் திண்டாடும் அப்பாவின் உணர்வை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார் ஆசிரியர். தன் மகளுக்கு ஒரு புது ஆடை கூட வாங்க முடியவில்லை என்ற சோகத்தை எண்ணிக்கொண்டிருக்கும் சூழலில், கீழே கிடந்த மாயாஜால பென்சில் கொண்டு, மகளின் புற்றுநோயை குணப்படுத்த டாக்டரையும்,மருந்துகளையும் தன் ஓவியத்தின் மூலம் உயிர்பித்து கொண்ட “பாவாடை சட்டையும் பச்சை மாத்திரையும் “கதை மிக சுவாரசியமாக உள்ளது.

ஒருகாலத்தில் பள்ளியில் அமர்ந்து, கனவுகளால் கண்களை நிரப்பிய சிறுவன் ஜெகதீசன்.இன்று உலகம் போற்றும் விஞ்ஞானி ஆகிறான்,
தான் கற்ற பள்ளிக்குத் திரும்பி வந்து, பள்ளி வளாகத்தில் காலடி வைத்த அந்த நொடியே, நினைவுகள் மலர்கிறது.அவர் மெதுவாக தனது பழைய வகுப்பறைக்குள் நுழைந்ததும்
அங்கு அமைதியாக நின்றிருந்த கரும்பலகையை நீண்ட நேரம் பார்த்து நிற்கையில்,அமைதியை உடைத்து கரும்பலகை பேசத் தொடங்கியது.ஜெகதீசனின் கண்கள் கலங்கின.
அப்போது அந்த வகுப்பறையில் இருந்த கரும்பலகை மட்டும் அல்ல,
பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் இருந்த கரும்பலகைகளின் உள்ளமும் பேசத் தொடங்கியது. இந்தக் கதையில் கரும்பலகைக்கு உயிர் கொடுத்து பேச வைத்த ஆசிரியர் வகுப்பறை மீது உள்ள நேசத்தை காட்டுகிறது.

தோப்பூர் என்னும் அழகிய கிராமத்தில் ‘ஆலமரத்தை தன் தாயாக’ நினைத்து வாழும் ஊமையனின் வேதனை இந்தக் கதையில் மட்டும்மல்ல,வாசகர் ஆகிய நமக்கும் வேதனை அளிக்கக் கூடிய விஷயம் இக்கதையில் கொட்டிக் கிடக்கிறது.அழகிய கிராமத்தில் நெடுஞ்சாலையும் தொழிற்பேட்டையும் தனியார் மயமாதல் போன்ற நவீன புரட்சியும் தோப்பூர் கிராமத்தை விட்டு வைக்கவில்லை. வயல்வெளிகள், தோப்புகள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி, எழில்மிகு நிறைந்த தோப்பூர் கிராமம், ஊமையனின் ஆசைக்கிணங்க போராடி மீண்டும் பழைய தோப்பூராக மாற்றியது ஊமையனின் இன்றியமையாத தீவிர செயல்பாடு இக்கதையின் முக்கிய அம்சமாக திகழ்கிறது.

படிக்கும் போதே அதிர்ச்சியை ஏற்படுத்தி,விழிப்புணர்வு தரும் அருமையான கதை “டெக் நெக் சிண்ட்ரோம்”.ஆம்..5G பயன்படுத்தும் இக்காலகட்டத்தில் குழந்தைகள் முதல் முதியோர் வரை தலை குனிந்து திரையிலேயே வாழ்க்கையைக் கழிக்கும் பட்சத்தில், 50G பயன்படுத்தும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்தால் எப்படி இருப்போம், எந்த மாதிரி உடல் அமைப்பு இருக்கும் என்ற பயத்தை கண்ணில் காட்டிவிட்டார் ஆசிரியர். உதாரணமாக,கிபி 2500 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ‘கழுத்தை நேராக நிமிர்த்தி நடந்தால் குறைபாடு உள்ளவர்’ என்று மக்கள் நினைப்பார்களாம்.அப்படி என்றால் அக்கால கட்டத்தில் மொபைல் திரையை பார்த்து பார்த்து அனைவரின் கழுத்தும் பூமியை நோக்கி குனிந்த கழுத்தோடு தான் நடப்பார்கள் என்பதை யோசிக்க வைத்துள்ளார் நூலின் ஆசிரியர்.

“ரீங்ங்ங்” எனும் கதையில்,பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர் சுந்தரேசன் பட்டாம்பூச்சியை உதாரணமாக கொண்டு, மாணவர்கள் பட்டாம்பூச்சி போல் அழகாகவும், வண்ணமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றால் உங்கள் சிறகுகளை சிறகடிக்க நீங்களே பழகவேண்டும் என்கின்ற நம்பிக்கையை வளர்க்க வைத்தது மட்டுமல்லாமல், பட்டாம்பூச்சி மாதிரி உயர பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அழகான கருத்தினை முன் வைத்துள்ளார்.

“சக்கர நாற்காலி” எனும் சிறுகதையில், ஆசிரியர் அறிவியலில் மிகுந்த ஆர்வமும், ஆற்றலும் உடையவர் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக இக்கதை நிருபணம் செய்யும்.Parallel universe,Multiverse, ஸ்ட்ரிங் theory மற்றும் பிரபஞ்சம் போன்றவற்றை உணர்த்தும் விதமாக, சூர்யா,தேவா ஆகிய கதாபாத்திரங்கள் கொண்டு, இன்னொரு உலகத்திற்கு நம்மை அழைத்து செல்ல முயற்சி செய்கிறார் ஆசிரியர்.

செல்போன் (ஸ்மார்ட்போன்) மனித வாழ்க்கையை எளிதாக்கிய ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. ஆனால், அதை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தும்போது பல தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணமாக மாறுகிறது என்பதை மிகத் தெளிவாகவும்,சமூகத்தில் தினமும் நிகழக்கூடிய பிரச்சனைகளை செய்தித்தாள்களில் வெளிவருகின்ற “ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சினைகளையும், விபத்துகளையும், உறவுகளையும் பற்றிய குறிப்புகளை “விக்ரம் வேதா” எனும் சிறுகதையில் மிகத் தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது.

வாழ்க்கையில், நாம் நல்லா இருக்கும் போதே பணம் சேர்க்கும் குணம் இருக்க வேண்டும். அனுதினமும் உடற்பயிற்சி செய்து உடல்நலத்தை பேண வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் செலவு பண்ணாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்க வேண்டும். மனைவியோடு குடும்பத்தோடு ஒன்றி வாழ நேரம் ஒதுக்க வேண்டும. தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும் என்ற விழிப்புணர்வு செய்திகளை “நல்ல காலம் பொறக்குது” எனும் கதையில் வேதநாயகம் மூலம் வாசகர்களுக்கு அறிவுரை பகிர்ந்துள்ளார் ஆசிரியர் கதிர்.

“கடைசிப் புத்தகம்” எனும் சிறுகதையில், ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைராஜன் மூலம் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.புத்தகம் என்பது வெறும் காகிதம் மட்டுமல்ல; அது அனுபவங்களின் பொக்கிஷம். வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் நம் அறிவை விரிவுபடுத்தி, சிந்தனையை செம்மைப்படுத்தி, வாழ்க்கையை உயர்த்துகிறது. புத்தகங்களை நேசிப்பவன் உலகையே வெல்லும் ஆற்றலைப் பெறுகிறான் எனும் உரத்த சிந்தனை கொண்டு “வாசிப்பை நேசிப்போம்” என்று ஆசிரியர் கதிரேசன் நமக்கு அன்பு கட்டளையிட்டு சென்றுள்ளார்..
அனைவரும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் படித்தால் நிச்சயம் மாற்றம் உண்டாகும்.)

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)
ஆசிரியர்:கதிர் சக்தி (கதிரேசன்)
வெளியீடு:மௌவல் பதிப்பகம், 2026
விலை:₹.130
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 தி.தாஜ்தீன்,
முதுகலை ஆசிரியர்,
அரசு உதவிபெறும் கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி,
ஆடுதுறை.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *