Kathirukka katrukolvom Poem by Shanthi saravanan சாந்தி சரவணனின் காத்திருக்க கற்றுக்கொள்வோம் கவிதை

காத்திருக்க கற்றுக்கொள்வோம் கவிதை – சாந்தி சரவணன்




விடியலை வரவேற்க சேவல் இரவெல்லாம் காத்திருக்கின்றது!
மொட்டு மலராக சில நாட்கள் காத்திருக்கிறது!
கூட்டு புழு பட்டாம்பூச்சியாக சில வாரங்கள் காத்திருக்கிறது!
காய் கணியாக சில மாதங்கள் காத்திருக்கிறது!
ஒரு உயிர் ஜணிக்க ஐ இரு மாதம் தாயின் கருவில் காத்திருக்கிறது!
ஆதவன் இருளை நீக்கி உதிக்க இரவெல்லாம் காத்திருக்கிறது!
மனிதா,
நீ மட்டும் ஏன் காத்திருக்க மறுக்கிறாய்?
காசை கொடுத்து “கையூட்டை” வளர்கிறாய்?
காத்திருந்து தான் பாரேன்!
தமிழ் அகராதியில்
“கையூட்டு”
என்ற சொல்லையே நீக்கிய  பெருமையை  நம் சந்ததியினருக்கு
வரமாக ஈன்று  தான் செல்வோமே!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 4 Comments

4 Comments

  1. சரவணன்

    ..இத்தருணத்தில் அருமையான கவிதை வாழ்த்துகள் தோழர்

  2. B. Arivan

    கவிதையின் பொருள் நன்றாக உணரமுடிகிறது தோழர் . சொற்களில் இன்னும் சிறிது அழுத்தம் இருந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்… எனது பிரியங்களும் வாழ்த்துக்களும்

  3. ArthiMohanbabu

    கைவிட வேண்டிய கையூட்டை பற்றி அடுத்த சந்ததியருக்கு பொறுமையான கவிதையாக …. வாழ்த்துகள்

  4. Jayabal

    காத்திருக்க இயலாமையே கையூட்டின் வழிதடம். கவிதை அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *