காற்றுக் களவாணி
ஆள் அரவமின்றி தனிமையில்
சந்திக்க அழைத்தான்
அந்தக் குறும்பன்.
வெளுத்த வானம் ஏனோ?
வெவகாரமாய் சிரித்து வெனையமாய் பார்த்தது!
மெல்லிய இசையாய்க் காதுகளை
மெல்லத் தட்டிச் சென்றான்
மெருகு கூடியவன்!
காதில் கிசுகிசுத்த குரல் கரகரப்பாய்க் கிறுகிறுக்க
கண்கள் அலைந்தன!
சொல்ல வந்ததை மறந்து
சொக்கி நின்ற வேளை
சொல்லாமல் வந்தான்!
கண்களை வருடி ஒளிந்து
கொண்டான் அவன்
கரைந்த உப்பாய்!
செடி கொடிகள் அசைய
யாரோ நடந்து வர
செருமல் கேட்டது!
சுருக்கென கடித்த எறும்பை
தூது சொல்ல
அனுப்பி வைத்தான்!
அந்தியில் பூத்தப் பூக்கள்
அழகாய் மணம் வீசி
அவனை அழைத்தது!
அருகே வந்த அவன்
காதல் சொல்ல மறுத்து
காதில் சொல்லி மறைந்தான்!
காற்றுக் களவாணி
இரா. கலையரசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பு