கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்
1) கைகளில் ஏந்தினேன்
கருவறை ரத்தத்தோடு
மகள் அழைக்கிறாள்
2) சுவற்றில் கோடு போட்டு
கணக்கு அறிவாள்
கிராமத்துக் கிழவி
3) சின்னச் சின்ன கற்பனை
பேனா எடுக்கிறேன்
பேசுகிறது இயற்கை
4) நிதானமாக யோசிக்கிறேன்
என்ன எழுதலாம்
தெரிகிறது நிலா
5) மழலை கதை சொல்லி
வியக்க வைக்கிறாள்
தலையாட்டும் விலங்குகள்
6) புதுமைப் பெண்ணின்
நிமிர்ந்த நடை
ஊன்று கோலுடன்
7) எட்டியே இருந்தாலும்
துணையாக வருகிறாள்
நிலாப் பெண்
எழுதியவர்:
தஞ்சை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான கவிதைகள் தொடரட்டும் 🎉💐
ஒவ்வொன்றும் முத்துக்கள்
தொடரட்டும்
தமிழ்ப்பணி
வாழ்த்துகள் சகோதரி
தமிழ்மலர்
சிதம்பரம்.
அருமை ❣️🥰