ஹைக்கூ கவிதைகள் – கவிதா பிருத்வி#
ஊழல்வாதிகளுக்கு இடையே
நேர்மையானவனை தேடும் கண்கள்
வாக்குச் சீட்டு!!

#
இடம் பொருள் போல
அரசியல்வாதிகள் விற்பனைக்கு..
கட்சித் தாவல்!!

#
அரசியல் நாகரிகம் இல்லை
கொச்சைப் பேச்சுக்கள்
இன்றைய அரசியல்!!

#
மக்களுக்கு பிச்சையாக
மக்கள் பணம்..
ஓட்டுக்குத் துட்டு!!#
குண்டும் குழியுமான சாலை
அரிதாரம் பூசிக்கொண்டது..
தேர்தல் தேதி அறிவிப்பு!!

 

#
நடைபாதை மக்கள்
மானம் காத்தது
கட்சிக் கொடி!!

#
மக்கள் நலனுக்காக ஓட்டு
தன் நலனை உயர்த்துகிறான்
அரசியல்வாதி!!

#
அரசுஊழியனின் ஓய்வைப்போல
அரசியல்வாதிக்கும் ஓய்வு..
மாற்றமே மாறாதது!!

கவிதா பிருத்வி
தஞ்சை.