kavithai: aanmigam - s.lingarasu கவிதை: ஆண் மிகம் -ச.லிங்கராசு
kavithai: aanmigam - s.lingarasu கவிதை: ஆண் மிகம் -ச.லிங்கராசு

கவிதை: ஆண் மிகம் -ச.லிங்கராசு

‘ஆண்’மிகம்

மதிக்குள் இது புகுந்து எப்படி
எல்லாம் மானுடத்தை
ஆட்டு விக்கிறது?
நம்பிக்கை என்று ஒன்றுதான்
இங்கு இத்தனையையும்
இயக்கி இல்லாத தொன்றை
இருக்கும் என்கிறது.

பக்தி என்கிறது முக்தி என்கிறது
படைத்தவன் என்றெல்லாம் பகர்கிறது ஆனால் அறிவியல்
என்னும் ஆயுதம் கண்டால்
அத்தனையும் மாறுகிறது

இல்லாததைக் காப்பாற்ற எத்தனை
இரத்தக் களரி இங்கே
ஏன் சிந்திப்பதில்லை மானிடனே?
இருக்கிறதெனின்
ஏனிந்த தேவநாதன்
அந்தப் புரமாக்கி சிந்து பாடினான்
ஆலயத்தில்?

பெருமானின் பிரசாதமே
பெரும் பேறு எனில்
ஏனிந்த கலை பேதம்?
எட்டிப் பார்க்க லாமா?
மண்ணிலே கொட்டி மா பாதகம்
செய்யவோ?
அத்தனைக்கும் அரங்கன்
அமைதியாகவே இருந்தான்.

காளிக்கோயிலிலும் களியாட்டம்
போட்டவர்கள்
கடவுளைக் காப்பாற்றப்
புறப்பட்டு வருகிறார்கள்!
அறிவியலை வென்றவர்களோ
அரங்கனிடம் போய்
அனுமதிக்கு நிற்கிறார்கள்!

–ச.லிங்கராசு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *