மீசை மழித்து
பெண் வேடம் தரித்து
மேடையேறி
ஆடிக்கொண்டிருக்கும்
தன் அப்பாவை
தூரத்து தெருமுனையிலிருந்து
பார்த்துக்கொண்டிருக்கும்
தன் மகனின்
கண்களுக்குள்
நிஜங்களாக நிழலாடுகிறது
தான் இதுவரை
பார்க்காத
தன் அம்மாவினுடைய
மறு உருவத்தின் பிம்பம் ,

கவிதை : அம்மாவாகிய அப்பா..! - கவிஞர் ச.சக்திkavithai : ammavaakiya appa..! - kavignar sa.sakthi
Posted inPoetry
