kavithai: arputham-suryanila கவிதை: அற்புதம் - சூர்யநிலா
kavithai: arputham-suryanila கவிதை: அற்புதம் - சூர்யநிலா

கவிதை: அற்புதம் – சூர்யநிலா

நீயும்  உனது
ஊரும் நலமா.?
அல்லது என்னைப் போல்
சுகவீனமாக சுருண்டுக் கிடக்கின்றதா
உனது ஊரும் ?
எனது ஊரும் அத்தனையொன்றும்
இரக்கமற்றதில்லை.
அது நம்மைப் பொக்கிஷமாகப்
பாதுகாக்கின்றது.
நீ அதனை
அவ்வப்போது சாதாரணமாகவாவது
கண்டு வை.
ஊர்களுக்குக்  கோபம் வரக்கூடாது..
வந்தால்..?
எந்த அற்புதமும் நிகழாது..
அது
நம்மையெல்லாம் விட
அற்புதத்திலும்
அற்புதமானது.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *