அழுக்கில் தோய்ந்த
மனிதனவன் கைகளில்
வெள்ளை பூச்சு
விளையாடி மகிழ்கிறது.!
எண்ணெய் ஊற்ற எடுத்த
கரண்டியில்
மழை சாரலாய்
பட்டு தெறிக்கிறது
வழியும் எண்ணெய்
குட்டி வட்டத்தில்
குதூகலமாய் உருவாகி
வருகிறது.
வெள்ளை உணவு..
விரல்கள் விரிந்து
அழகிய சூழல் வீச்சை
தயார் செய்ய,
புயல் வராமல் நிறுத்தியது .
புரோட்டா மாஸ்டரின் கைகள்.
சூடாய் இருக்கும்
கறுப்பு மேசையில்
சொயிங் சத்தத்துடன்
விழுகிறது வட்ட துண்டு.!
எண்ணெய் குளியல்
சுகமாய் இருக்கிறது அதற்கு
சிவந்து போனது அனலில்.!
காற்றில் பறந்து
கை மாறுகிறது.
எல்லா பக்கங்களிலும்
அடி வாங்கி பின்
இலவம் பஞ்சின் கனமாய்
என் வட்டிலில்
பூவை கொய்வது போல்
மெல்ல பிச்சு போடுகிறேன்.!
சால்னாவில் மூழ்கடித்து
கண்கள் விரிய பார்க்கிறேன்.
எச்சிலுக்கு நாக்கு
பணிந்தே விட்டது.
நாவின் ருசியில்
கண்கள் பார்க்கிறது
வியர்வையின் வாசத்தில்
பரோட்டாவுடன் வாழ்க்கையை
அடித்து கொண்டிருக்கும்
“பரோட்டா மாஸ்டரை “