வெ. நரேஷ் கவிதைகள்

வெ. நரேஷ் கவிதைகள்




* உழைக்கச் சென்றவன்
உறங்க மறுத்ததால்
உதவியாய்ச் சென்ற
இடது கைகள்.

* உடைமையைச் சுமந்து
உழைப்பினைத் தொடர்ந்து
உதிரத்தை இழந்து
இறப்பினைப் பெறுபவனே
உழைப்பாளி.

* வறுமையில் வாழ்பவனை
வரவேற்றது
டீ கடை பெஞ்சு.

* அறுவடை செய்து
நெல் குவித்த பிறகு
எதிரில் நிற்பான் முதலாளி
பாதியைப் பறிமுதல் செய்ய.

* கரையோரம் வாழ்ந்து வந்தோம்
ஓட்டுக்காகக் குடிசைக்குள்
கனவுகளை விதைத்து
ஆங்காங்கே கட்டிக் கொண்டான் மாளிகையை.

* ஆள்காட்டி விரலைக் காட்டிவிட்டு
மை பூசிக்கொண்டு வருகிறார்கள்
அவர்களின் முகத்தில்.

-வெ. நரேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. Suresh Esakkipandi

    சூப்பர் சூப்பர் தோழர்
    தொடர்ந்து எழுதுங்கள்…
    வாழ்த்துக்கள்

  2. ஜெகன்

    அன்பு மைத்துனன் நறேசுக்கு மாமாவின் வாழ்த்துக்கள்…உனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதை அறிந்து பெரிதும் உவகை கொள்கிறேன்..தொடர்ந்து எழுதவும்…அன்புடன் மாமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *