நகரத்தில் தமிழ் பாடும் நல்மூதாய் பூச்சி
நற்றிணை பாடும் நல்மூதாய் !
நகரத்தை பார்க்கலாம் வா என் தோழாய் !
வற்றிய வயிறுக்கும் வாழ் வளிக்கும் !
பணம் கொட்டிட தொழில்கள் வளர்ந்திருக்கும் !
நட்டிய கம்பமும் நகர்திருக்கும் !
நலம் பற்றிய பெயர்கள் மறைந்திருக்கும் !
நகரத்தைக் காணும் நல்மூதாய் !
வயல்களில் கட்டடம் விளையாடும் !
வாய்க்காலில் குடிசைகள் குடியேறும் !
நதிகளில் நகரங்கள் வழிந்தோடும் !
அங்கு நச்சுப்புகை நாகரிக துதி பாடும் !
தண்ணீர் புகுவதற்கு இடம் தேடும் !
அந்தத் தார் ரோட்டில் தவளை உயிர் போகும் !
இயற்கை தண்டனை பெற்ற இடமாகும் !
இங்கே மனிதம் அதிகம் விலைபோகும்
சங்கம் பாடும் புள்ளினமே !
இந்த சங்கடத்தை பாடு மூதாய் இனமே !
ஆறுகளில் நுரைகள் அலை மோதும் !
அந்த சாயங்களால் நிலங்கள் நிறம்மாறும் !
ஏரிகளில் வாரியங்கள் வழிதேடும் !
இந்த ஏமாற்றுத் தனத்தால் பல்லுயிர் மாயும் !
புகையில் பூக்கள் மலர்ந்திருக்கும் !
அங்கு புன்னகைக்க மனங்கள் மறுத்திருக்கும் !
பாரு பாரு பழம் மூதாய் !
பத்துப்பாட்டு பாடும் கோப மூதாய் !
நகரம் என்ற ஒரு சொல்வாழும் !
அது நாகரிகம் என்று தன்னை ஓதும் !
பசுமை என்ற சொல் மாளும் !
அங்கு செயற்கை என்ற செடிகள் உயிர் வாழும் !
என் பப்பாளியும் முருங்கையும் குணம் மாறும்!
சாப்பாட்டில் நெகிழிகள் விளையாடும் 1
வளர்ச்சி என்னும் இயற்கை அபகரிப்பு !
நகர அங்கீகாரம் என்பது விவசாய கருக்கலைப்பு!
இந்த நரகத்தைப் பாரு தாம்பலமே !
இந்த தரணிக்கு கொடு மனோபலமே !
முனைவர் இரா பிரபாகரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.