சுதாவின் கவிதை

சுதாவின் கவிதை




கதவுகள் அனைத்தும் மூடி
ஜன்னல்கள் திறந்து கொண்டன…
சின்னச்சின்ன புன்சிரிப்பும்
செயலிழந்து போனது…

“நான் இருக்கிறேன் “என்ற வார்த்தை
நலிந்து, நசிந்து, நாராசமாய் வீசுகிறது.
இந்த வீச்சத்தில் மீண்டு…
நான் ஜன்னல்களைக் கதவுகளாய்
மாற்ற என் வேர்வைகளையும்…
ரத்த துளிகளையும் கடந்து…

கதறிய போது சிதறிய
கண்ணீர்த் துளிகளை
மீண்டும் சேகரிக்கிறேன்…
சிறுகுழந்தை சிதறிய
பொருட்களைச் சேகரிப்பது போல…

வலிமை கொண்டு ஜன்னல்களை
கதவுகளாய் மாற்றுவேனா?
நான் ஜன்னல் வழி
ரகசியமாய் இரசித்த உலகை
விசாலமாய்ப் பார்க்க வாய்க்கும்

போகலாம்…

இருந்தும் என் எண்ண ஓட்டத்தில்
ஒரு ஆசை…இனி வார்த்தைகளின்
வசீகரத்தில் விட்டில் பூச்சியாய்
சிக்கிக் கொள்ளக்கூடாது என…

-சுதா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *