மளிகைப் பொருட்களை
வீட்டுக்கு வாங்கி வந்தவுடன்
பொட்டலங்களை உடைத்து டப்பாக்களில் கொட்டுகிறேன்
நிலக்கடலைலில் சிறிது கீழே விழுந்தது
துவரம் பருப்பில் சிறிது கீழே விழுந்தது
பொட்டுக்கடல்களிலும் ஒன்று இரண்டு
சர்க்கரையிலும் சொல்ல வேண்டாம்
காசு செலவழித்து இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்து
டப்பாவில் கூட சரியாக
கொட்ட முடியவில்லை
என்று வருத்த படும்போது
தரையைக் கூட்டி வெளியே கொட்டியதும்
சிறிது நேரத்தில்
பல்லுயிரிகள் தின்று கொண்டிருந்தது, ஒருவேளை உணவாய்
திறமைகள்
வெற்றி பெறுவதற்கு
மாத்திரம் போதும்,
உலகம் இயங்குவதற்கு போதாது.
•••••••••••