என் இனிய தனிமையே!
உயர்ந்து நின்ற ஒரு மரத்தின் நிழலில் ஓய்ந்து அமர்ந்து யோசித்து பார்,
எதுவும் நிலை இல்லாத வாழ்வில் எதையோ நிரூபிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம்,
வெளிச்சம் இல்லாத இடத்தில் நிழலும் கூட துணை இல்லை..
மரங்கள் இல்லாத இடத்தில் காற்றுக்கும் கூட இடம் இல்லை..
பெற்றவர்கள் ஒதுக்கிய போது தனிமை என்றேன்..
உடன்பிறந்தவர்கள் விலகிய போது தனிமை என்றேன்..
நண்பர்கள் இல்லாத போது தனிமை என்றேன்..
காதலி பிரிந்த போதும் தனிமை என்றேன்..
எல்லோரும் விலகிய போதும் என்னோடு நின்றது என் தனிமை தான்
ரசிக்கிறேன் என் தனிமையை தனியாக ரசிக்கிறேன்.
என் இனிய தனிமையே !!