இரண்டாம் தடவையும்
என்னைப் பார்க்க மாட்டீர்கள்
அதே தேன் நிரம்பிய
குடுவையல்ல நான்
உணர்வுகளின் உக்கிரத்தை
துப்பி வழித்து எறிந்து
விட்டே மீண்டும்
வந்திருக்கிறேன்
என்னுள் உடைந்த சிதிலங்களை
சித்திரமாக்கி வைத்திருக்கிறேன்
நீங்கள் பார்த்துச்சிரிக்க
சேதங்கள் இங்கே இல்லை
பதங்கமாகிய போர்வாளின்
தகதகப்பை இனி
உணர்வீர்கள்..
புழுதி தேடும்
பாலைவனத்தில் சுழன்று
சுற்றும் புயல் நான்
தேனீக்களின் சினத்தில்
எழும் அதிர்வலையைத்
தாங்க நீங்கள்
தயாராக இருங்கள்….
தட்டித் தட்டி அடித்து அடித்துக்
கூரான வேல்நான்…
தாராளமாக வாருங்கள்
போராட
என்னினிய எதிரிகளே!
அதே தேன் நிரம்பிய
குடுவையல்ல நான்
உணர்வுகளின் உக்கிரத்தை
துப்பி வழித்து எறிந்து
விட்டே மீண்டும்
வந்திருக்கிறேன்
என்னுள் உடைந்த சிதிலங்களை
சித்திரமாக்கி வைத்திருக்கிறேன்
நீங்கள் பார்த்துச்சிரிக்க
சேதங்கள் இங்கே இல்லை
பதங்கமாகிய போர்வாளின்
தகதகப்பை இனி
உணர்வீர்கள்..
புழுதி தேடும்
பாலைவனத்தில் சுழன்று
சுற்றும் புயல் நான்
தேனீக்களின் சினத்தில்
எழும் அதிர்வலையைத்
தாங்க நீங்கள்
தயாராக இருங்கள்….
தட்டித் தட்டி அடித்து அடித்துக்
கூரான வேல்நான்…
தாராளமாக வாருங்கள்
போராட
என்னினிய எதிரிகளே!