யாருக்கும்
தெரியாமல்
தின்று வாய் துடைத்து
வரிசையாய் செல்கின்றன…
அந்த
‘எறும்புகள்’
யாருக்கும்
தெரியாமல்
கலியாணம் பேசி
வெற்றிலை கைமாறி
கொண்டாடி மகிழ்கின்றன…
அந்த
‘எறும்புகள்’
யாருக்கும்
தெரியாமல்
குழந்தை பிறப்பித்து
பெயர் சூட்டி
சட்டி பானை தொட்டு
சிரித்து மகிழ்கின்றன…
அந்த
‘எறும்புகள்’
யாருக்கும்
தெரியாமல்
சடங்கு நடத்தி,
ஊர் கூட்டி
கை நனைத்துச் செல்கின்றன…
அந்த
‘எறும்புகள்’
யாருக்கும்
தெரியாமல்
செத்து,
உடலை இழுத்து,
பாடைக் கட்டாமலே
செல்கின்றன…..
அந்த
‘எறும்புகள்’
யாருக்கு
தெரியும்
எவை
எது செய்கின்றன… என.
பால புரஸ்கார் விருது பெற்ற திரு உதய சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
கல்லை மலரடியான்.