இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது
இப்படியான
வாழ்க்கை.
முதலில்
கைமாற்றாய்ப் பணம்..
அடுத்து
மாத வட்டி
வார வட்டி
ரன் வட்டி
மீட்டர் வட்டிக்கு
வாங்கிக் கொண்டுதான்
நகர்ந்து செல்கிறது
வாழ்க்கை..
தை மாதத்தில் தருகிறேன் என
பெரும்பாலான
கடனை வாங்கி
வருடங்கள் பல கடக்கின்றன..
சில நபர்களிடம்
அடுத்த மாதம்
வங்கியில் கடன் பெற்று
முடித்து விடுவதாகவும்
பதில் சொல்லியே
நகர்ந்து செல்கிறது
வாழ்க்கை…..
அடுத்தவர் போல்
நீ எப்பத்தான் முன்னேறுவ என
மனைவி
சொல்லும் போதெல்லாம்
அப்படியே உறைந்து போகிறது.
பெரும்பாலான
அலைபேசி அழைப்புகளுக்குத்
தவணையே
பதிலாக இருக்கும்.
வங்கியில் வைத்த நகையும்
வீடு திரும்பாமலேயே
சிலநேரம்.
சென்று விடும்!
யாரிடமும்
கோபப்பட்டு
பதில் கூறுவதற்குத்

தெம்பு
இல்லாமல்
போனது..!!!
இப்படியான வாழ்க்கையில்..
விவசாயத்திற்கு
வாங்கிய கடனுக்காக
குடியிருந்த வீடும்
ஜப்தி
செய்ய வங்கியின்
அதிகாரிகள்
பிடியில்
அப்படி
கடன் தள்ளுபடி பெற்று
வெளிநாடு சென்று விட
இவர் என்ன மல்லையாவா
இல்லை நீரவ் மோடியா??
ஏழை
விவசாயி!!!””-