ஏண்டா
மொவனே
இன்னைக்கி
ஞாயித்து கிழமடா
உனக்கு
ஆட்டுக்கறி எடுக்கவா
இல்ல
கோழி கறி எடுக்கவாடா
யென மழுங்கும்
என் அப்பனின் சொல்லுக்கு
ஏம்பா இன்னைக்கி
ஒரு நாளாச்சியும்
மாட்டுக்கறி
வாங்கிட்டு வாயேம்பா
யென நீளும் தன் மகனுடைய சொற்களுக்குள்
தான் புதைந்திருக்கின்றது
உப்பு மிளகாய்
இஞ்சி கறிவேப்பிலை காரமென
நாக்கு துலாவும்
தூரத்தில் பக்கத்து ஊட்டுல
வேவும் மாட்டுக்கறியின் வாசம்…

kavithai ; karisoru - kavignar s.sakthi கவிதை: கறிச்சோறு - கவிஞர் ச.சக்தி
Posted inPoetry