முடியாட்சி ஒழிந்து குடியாட்சி பிறந்தாலும்
விடியாத ஆட்சியினால் விளைந்திடுமா நன்மைகள்?
கேடான மதவாதம் கீழ்மைமிகு சாதீயம்
பாடாய்ப் படுத்துகின்ற பண்பற்ற மொழித்திணிப்பு
ஒற்றைக் கலாச்சாரம் ஓங்கிவரும் இந்துத்துவா
குற்றச் செயல்மிகுதல் கூடிவரும் பெண்ணடிமை
பாலியல் வன்முறைகள் பகுத்தறிவில் தீவைத்தல்
கூலித் தொழிலாளர் கூனிவிட்டார் சுரண்டலினால்
முதலாளி வர்க்கங்கள் முன்னேற்றப் பாதையிலே
அதானி அம்பானி அடுக்கடுக்காய் கோடிகளில்
விடுதலை வேள்வியிலே விளங்காத பாஜகவால்
கெடுதலை மிகுந்துவிடும் கேட்டினை அகற்றிடுவோம்!
Posted inPoetry