நேச உள்ளங்களின்
சந்திப்புகள்
நேற்றோ
இன்றோ
நாளையோ
நிகழ்தல் கூடும்
அக்காத்திருப்புகளின்
நொடிமுட்கள்
வானளாவ முட்டி
நட்சத்திரங்களைத் தரைக்குத்
தட்டி விடும்
வளைந்து வளைந்து
வானவில் வட்டங்களை
வரைந்து தள்ளும்
பின்னும்
பெரும்படையில்
அமைதிக் கோஷமிடும்
ஆன்மாவிலுதித்த
அன்பின்
பட்டாம்பூச்சிகள்
வானம் தொட அசையத்தொடங்கி விடும்..
மகிழ்ச்சியின் பிரலாபமன்றி
இனி வேறென்ன
கூறல் வேண்டியிருக்கிறது?
சந்திப்புகள்
நேற்றோ
இன்றோ
நாளையோ
நிகழ்தல் கூடும்
அக்காத்திருப்புகளின்
நொடிமுட்கள்
வானளாவ முட்டி
நட்சத்திரங்களைத் தரைக்குத்
தட்டி விடும்
வளைந்து வளைந்து
வானவில் வட்டங்களை
வரைந்து தள்ளும்
பின்னும்
பெரும்படையில்
அமைதிக் கோஷமிடும்
ஆன்மாவிலுதித்த
அன்பின்
பட்டாம்பூச்சிகள்
வானம் தொட அசையத்தொடங்கி விடும்..
மகிழ்ச்சியின் பிரலாபமன்றி
இனி வேறென்ன
கூறல் வேண்டியிருக்கிறது?
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
ஏறாவூர்
இலங்கை

