சாவர்க்கர் என்ன
சுதந்திரத் தியாகியா
சரித்திர வாதியா
நாடாளுமன்றம்
திறக்க அவர்
பிறந்த நாள் தேதியா
மடல் தீட்டி
காட்டிக் கொடுத்த
விரலுக்கா மோதிரம்
சமதர்மத்
தோட்டத்திலா
இந்துத்துவா ஆதினம்
தலையை
விட்டுவிட்டா
பூமாலை
எதுகையைத்
தொலைத்தா
மரபுப் பாமாலை
காதுகளை
அறுத்துவிட்டா
சங்கீதம் வாசிப்பு
சனநாயகம்
புதைத்துவிட்டா
பாசிசம் விதைப்பு
அடிக்கல்
நிகழ்விற்கும்
இல்லை அழைப்பு
முடித்து
திறப்பதற்கும்
புறக்கணிப்பு
முதல்
குடிமகன்களுக்கும்
மநுவின் போர்வை
முடிப்போம் நாளை
வாக்களித்து
விடியல் தீர்வை.