கவிதை - மருவாதை ! kavithai - maruvaathai

கவிதை – மருவாதை !

மருவாதை !
***********
எங்கேனா….
மருவாதைத் தெரியுதா
பாருங்க?

எங்கியாவது
நின்னு பதில் சொல்லிட்டுப்
போறானா?

என்னமோ…..
கால்ல சுடு தண்ணி
ஊத்திக்கிட்டவம்மாதிரி
பறக்குறான்!

மருவாதை
தானா வரணும்;
க்கும்…..
அது,
பரம்பர ரத்தத்ல ஊறி
வரணும்!

பெரியவங்களோ
சின்னவங்களோ
பேசினாங்கனா,
நின்னு….. பதில் சொல்லணும்;
அதுதான் மருவாதை!

ஏதோவொன்னு
கேக்றவங்களுக்கு
நடந்துக்கிட்டே
பதில் சொன்னா எப்படி?

ஆடு, மாடுங்கதான்
கத்தக் கத்த
நிக்காமப் போயிட்டேயிருக்கும்!

நீ….
மனுஷன்தானே?

பெரியவங்களோ?
சின்னவங்களோ?
கேக்கறாங்கல்ல….

ஒரு நிம்ஷம்
நின்னு
என்னா ஏதுன்னு
கேட்டுட்டு,
பதில் சொன்னா
என்ன
கொறைஞ்சா போய்டுவ?

அப்போ….
நடந்துப் போறவனே
ஒரு நிம்ஷம் நிக்காம
நின்னு பதில் சொல்லாமப்
போனான்னா….
அது
எவ்ளோ மருவாதைக்
கொறைவுன்னுப் பாத்துக்கோ;

என்னமோ
வர்ர பூகம்பத்த
நிப்பாட்டப் போறவம் மாதிரி
காதுல வச்சி
அணைச்சிக்கிட்டே
புர் புர்னுப்
பறந்துக்கிட்டேப்
பேசிட்டுப் போறே?

ஒரு மருவாதைக்கு
நின்னுத்தாம்
பேசிட்டுப்போயேன்…
செல் பேசியிலப் பேசினா
நின்னுப் பேசக் கூடாதோ?

மருவாதைக்கெட்டவனே.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *