இன்னும்
எத்தனை நாட்களுக்கு
தான் நீ மேலிருந்தவாறே பேசிக்கொண்டிருப்பாய்
நான் கீழிருந்து
புரிந்தும் புரியாத
மாதிரியாய்
ரசித்துக் கொண்டிருப்பேன்
விடியும் வரை
நீளும் இருவருக்குமான
மெளனத்தின்
சொல்லாடல்களோடு
என் வீட்டின்
வாசலெங்கும் இறைந்து
கிடக்கிறது
மேலிருந்து நீ வீசியெறிந்த
மெளனத்தின்
சிறு சொற்களான பெரு வெளிச்சம்…