kavithai : muzhuvathum tholaiyamal...- dr.jaleela musammil கவிதை : மூழ்கித் தொலையாமல்... - Dr ஜலீலா முஸம்மில்
kavithai : muzhuvathum tholaiyamal...- dr.jaleela musammil கவிதை : மூழ்கித் தொலையாமல்... - Dr ஜலீலா முஸம்மில்

கவிதை : மூழ்கித் தொலையாமல்… – Dr ஜலீலா முஸம்மில்

இதயம் முழுவதையும்
முற்றாகப் பயன்படுத்தாமல்
இதயம் பூராகவும்
நிறைத்துக் கொள்ளாமல்

சுவாசம் மொத்தமும்
இழுத்துக் கொள்ளாமல்
சுவாசம் முழுவதும்
அடர்ந்து பரவாமல்

ஆன்மாவில் இணைந்து இழைந்து ஊடுருவாமல்
ஆன்மாவில் பொழிந்து
முழுதும் நனைக்காமல்

உள்ளத்தில் அடர்வாசனையென எழுந்து நிரப்பாமல்
உள்ளத்துள் பேராசையென
பொங்கிப் பிரவாகிக்காமல்

உணர்வுகளின் ஒவ்வொரு
தேசத்தையும் ஆக்கிரமிக்காமல்
உணர்வின் கடலில்
மூழ்கித் தொலையாமல்

எனக்குத் தெரியவே இல்லை
எப்படி நேசிப்பது என்று!

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *