வலது பக்கத்தில்
வானலாவிய
கோபுரத்தோடு கோயில்
இடது பக்கத்தில்
சவப்பெட்டி
விற்பனை கடை
நடுப்பக்கத்தில்
நவீன மயமான
மருத்துவமனை
கோயிலில்
காணிக்கைப் பெட்டியும்
கடையில்
கல்லாப் பெட்டியும்
மருத்துவமனையில்
பணம் செலுத்தும் இடமும்…
மனிதனை நம்பிய
காத்திருப்பில்
மூன்று இடங்களும்
ஒன்றை நம்பும் போது
இரண்டினை
மறுக்கிறான் மனிதன்
மூன்றையும்
நம்ப வைக்கிறது
காலம்…
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்.