நிராகரிப்பு நிஜங்கள்
_____
தூண்களை பற்றிய படி
படரும் வெற்றிலைக்கொடி
குழந்தைகளின் தீண்டலில்
நிலைகுளைவதில்லை
கிள்ளியெறியப்பட்ட காம்பில்
சிறு பச்சையமும்
துளிர்விட்ட வித்தின்
மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன
ஆள்காட்டி விரல் நீட்டும்
தூரத்தில்
வேண்டிய நிலமும் உண்டு
வேண்டாத நபரின் பயணமும் உண்டு
அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும்
தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும்
வரப்பில்லாமல் பிரிக்கிறது
கம்பிகள் வளைந்தாடும்
அப்பாவின் காலத்தின் முன்னே தொடங்கிய கம்பிகள் வளைந்தாடும்
பழைய வீடு….
நிஜத்திற்கும்
உண்மைக்கும் அடிக்கோடிட்டு
காத்திருக்கிறது பல கேள்விகள்…

