நேற்று
இரவு பொழிந்த
மழையில்
நனையாமல்
இருக்கிறது
குழந்தையின் கனவுகள்
கூரையின்
எரவானத்தின் கீழே
மண் சுவரில்
மழையை வரைந்து
கொண்டிருக்கும்
சிறுவனின் கையில்
முளைக்க ஆரம்பிக்கிறது
ஒரு துளி காணல் நீர்
வீடெங்கும்
நிரம்பி வழியும்
குழந்தையின்
சிரிப்பொலியில் மறைந்து கொள்கிறது
நேற்று இரவு பெய்த
அடர்மழையின் சத்தம்,
தெருவெங்கும்
நாய்கள் குரைக்கும்
சத்தம் வின்னை கிழிக்கிறது
தன் மகனின்
கனவு வாசலில்
வந்து நிற்கிறார் அப்பா,
முந்தானை
முடிச்சை அவிழ்த்து
இரண்டு ரூபாய் நாணயத்தை
எடுத்து தன் மகனின்
கைகளில் கொடுக்கும்
பொழுதெல்லாம்
அம்மாவின் கைகளில்
பூக்கவே ஆரம்பிக்கிறது
அன்பின் வேரில்
பூக்கும் ஒரு பூ….!!!!!

