நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை அடையாளம்
வெள்ளையும் ஒன்றுதான்
கொள்ளை கொள்கையும் ஒன்றுதான்
கொடி நிறமே வேறு
தலையசைக்கும் பயிர்
தாலமிசைக்கும் சேற்றில் கால்கள்
களை பறிப்பவள் பாட்டு
உண்பதற்கானத் தலைகள்
இந்திய மக்கள் தொகை
கடலில் குறைவான மீன்கள்
கொடி பறக்கிறது
கோட்டைகள் எழப்போகும் வயல்வெளி
குடியானவன் ஆண்டி
மருந்தில்லா உணவுமில்லை
மதுவுண்ணா பயிருமில்லை
வயலெல்லாம் சாராய புட்டிகள்
மன உறைக்குள் வாள்
கை குலுக்கள் நடிப்பு
அரசியல் களம்
வசூல் மையங்கள் திறப்பு
தேதிகள் அறிவிக்கப் பட்டன
கடன் பெற்றோர்
கோடை வெப்பம்
குளு குளு குளிர்ச்சி
பெருங்கோயில் கருவறை
அண்ட விடாது
தமிழிளைஞன் வாசமறிந்தக் காளை
அடுத்த மாநில இளைரை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.