பறக்கத்தான் ஆசை!!!
பறக்கத்தான் ஆசை
வானில் மட்டுமல்ல வையகத்திலும்!!
வலி அறிய வாழ்க்கையில் விழி அறிய..!!
எதற்கும் ஓர் விலை உண்டு
இப் பிரபஞ்சத்தில் ..!!
மனிதனால் சூழப்பட்டது
மனிதனுக்கே நிலைப்பட்டது..!!
ஒவ்வொரு விடையும் தடையாகவே!
ஒவ்வொரு தேடலும் கனவாகவே!!
ஒவ்வொரு விதியும் வினையாகவே!!
ஒவ்வொரு பயணமும் விபத்தாகவே!!
ஒவ்வொருவர் கனவும் பயமாகவே!!!
மாறுதல்களும் மாற்றங்களும்
இப்படி ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் பல சூழ்நிலையில் ..!!
நினைவுகளில் எண்ணங்களின் ஓட்டம் ஒரு ஓரமாக!!
முடங்கிப் போன முட்களும் மீண்டும் துளிர் விடுமா!!
வலியில்லா வாழ்க்கையில் வாழ்வது பாரமா!!
பூட்டிய அறைக்குள் புத்தனாக ஒவ்வொரு மனிதர் மனதும்!!
கலங்குதே காலத்தில் காயப்பட்டு..!!
நொடிப்பொழுதும் நோயாகிப் போனதே ..காலத்தில் ..!!
உழைக்க மறந்த மனம் நினைக்குதே தினம் தினம் ..!!
விழி மேல் நெருப்பு ஒன்று அருகினில் வாடுதே …!!
படுக்கையும் பாய் மரம் போல் கடக்குதே …!!
எதிர்த்து நின்று போராடித் தன் கை நம்பிக்கை ..!!
வெற்றி தோல்வி அனுபவங்கள்
நம்முடன் தினம் பயணிக்கும் பறவை
வசப்பட்டே தீரும்
வானம் வெகு அருகில்….