பட்டாம்பூச்சி
***************
தகிக்கின்ற வெயிலில்
எதன் மீதும் அமரவில்லை
பட்டாம்பூச்சி….
மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது
பசியாறவில்லை
சிறு ஓடையிலும்
நீர் பாய்ச்சுகின்ற
நிலத்தின் வரப்புகளிலும்
நீர் பருகிவிட்டு
மீண்டும் மலர்களை தேடியலைகிறது ..
உழைப்பின் களைப்பில்
மரத்தின் நிழலில் சிறிது
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
என் மனதில்
பல வண்ணங்களைத்
தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ….!!
ச. இராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்

