அவளே அன்பின்
சொர்க்கமும் நரகமும்
அவளே வாழ்க்கையின்
தாகமும் தண்ணீரும்
அவளே ஏகாந்தம்
அவளே கொண்டாட்டம்
அவளொரு தேவதை
அவளொரு பிசாசு
மேகமாகவும் கவிவாள்
புயலெனவும் உருவெடுப்பாள்
மழையாகவும் பொழிவாள்
புயலாகவும் சுழல்வாள்
இரகசியங்களை
இறுக்கிக்கொண்டு
இதழ் வழி புன்னகை விரிப்பாள்
இருகண்களில்
இருளும் ஒளியும் குடியிருக்கும்
மெழுகும் அவளே
இரும்பும் அவளே
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட
கண்ணீர்ப்பூ அவள்
மௌனத்தின் காடு அவள்
சப்தங்களின் கூடும் அவள்
கூரிய ஆயுதங்கள்
தோற்றுத் தலைகுனியும்
அவள் பொறுமையில்
எத்தனை முறைகளென்று
அவளே அறியாள்
மரணித்து மரணித்து
உயிர்த்து விடுவது அவள் பொழுதுபோக்கு
அவளொரு பெருந்தீ
அவளொரு பெருந்தீவிரவாதி
நேசத்தைத்
தருவதிலும்
பெறுவதிலும்!