பிரிவு!
பிரிவுக்கு
முந்தைய கேளிக்கைகள்
இறந்தகாலத்தின்
தொலைதூரப்புள்ளியில்!
காலத்தால்
நெய்யப்பட்டது பயணம்!
நொடிகளின் பின்னே
ஓடுவது சாத்தியமின்றி
நோய்வாய்ப்பட்டுக்
கைபிசைகிறது
நிதர்சனம்!
இரவும் பகலும்
நிமிட நொடிகளும்
ஒன்றையொன்று
விழுங்கிக் கொள்கின்றன!
சடுதியில்
சத்தமின்றி
நரைத்துப்போன
வயதின் பின்னணி
அறிய முற்பட
காலமில்லை!
உருமாற்றப்பட்ட
சந்திப்புகளைக்கடந்தபடி
ஓடுகிறது நிகழ்காலம்!
அறிய முற்பட்டு
பிரிவுக்கான
பிடிபடாத காரணங்கள்
பலவாயின!
தொடர்கதைகளில்
இணைகின்றன
வேறு வேறு
சிறுகதைகளும்
கவிதைகளும்!
……