போராளிப் பெண்ணே நீயும் போராடு போராடு,
எதிரியென்று எவன் வந்தாலும் சாய்த்துவிடு வேரோடு,
உன் திறமை எதுவென்று தெரிந்துகொள்ள நீ ஓடு,
வாய்ப்பு உன்னை நெருங்கிவராது தேடிச்சென்று நீ நாடு,
சங்கத்தமிழ் பெண்ணே நீயும் சளைத்துவிட்ட பெண் அல்ல,
சிங்கத்தின் பிடரியை பிடித்து சீறி எழுந்து முன்னேறு,
போராளிப் பெண்ணே நீயும் போராடு போராடு,
எதிரியென்று எவன் வந்தாலும் சாய்த்துவிடு வேரோடு,
உன்னை நீ உருக்கிவிட்டு உழைத்துக்கொண்டு படும்பாடு,
உண்மை என்றும் உன்பக்கம் என்று எண்ணி விடை தேடு,
காவலுக்கு காத்திருப்பவன் தினம் காவலாளி கிடையாது,
அவனும் கழுத்தை வெட்டும் கோடாரி மறுக்க நீயும் முடியாது,
போராளிப் பெண்ணே நீயும் போராடு போராடு,
எதிரியென்று எவன் வந்தாலும் சாய்த்துவிடு வேரோடு………