kavithai : puthagavaasipu - shanthi saravanan கவிதை : புத்தகவாசிப்பு - சாந்தி சரவணன்
kavithai : puthagavaasipu - shanthi saravanan கவிதை : புத்தகவாசிப்பு - சாந்தி சரவணன்

கவிதை : புத்தகவாசிப்பு – சாந்தி சரவணன்

புத்தக வாசிப்பு
அங்குமிங்குமாய்
சிந்தி சிதறிக் கிடந்தது
மன சிதறல்கள்.

மூட்பாதங்கள்
மன சிதறல்களை
மிதித்து சென்றன!

மனதை தான் சிதைத்தாய்
சிதறல்களையுமா என மனம் கேட்டது?

பார்வையிருந்து இருந்தால்
மிதிக்காமல் சென்றிருப்பேனே என்றது?

பார்வையில்லையெனில் பரவாயில்லை!
வாசம் நுகர்ந்திருப்பாயே என மனம் கேட்டது?

நுகரும் தன்மையிருந்து இருந்தால்
நுகர்ந்து விலகிப் போய் இருப்பேனே என்றது!

அது சரி,
எனது துடிப்பு கூட வா கேட்கவில்லை
என்றது மனம்?

செவி கேட்டு இருந்தால்
தள்ளிப் போய் இருப்பேனே என்றது!

இதை கேட்டுக்கொண்டு இருந்த
புத்தகங்கள் உயிர் பெற்று
இறக்கைகள் முளைத்து
சமூகத்தின் கைகளில் படர்ந்தது!

பக்கங்கள் பட படவென அடித்துக் கொண்டது!
புத்தகத்தின் அந்த பரிசம்
சமூகத்தின் ஊனத்தை கலைத்து
உணர்வை உயிரிப்பித்தது

சக மனித மனதின்
வாசத்தை வாசிப்பில் சுவாசித்து
நேசிக்க துவங்கியது!

சமூகம் கருவுற்றது
நேசத்தையும், பாசத்தையும்
மனிதத்தையும்
மலர் பாதங்களோடு
பிரசவித்தது
புத்தக வாசிப்பு.

*******

திருமதி. சாந்தி சரவணன்
சென்னை 40
Mob:9884467730
email: shanthi1798@gmail.com

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *