அரிசியை எடுத்து செல்லும் எறும்பு
கலைகிறது மழை மேகம் …
ஒன்றாக கூடியிருக்கின்றன
ரேசன் கடை வாசலில்
பறவைகள் …
வாய்க்கால் நீர்
புதிய பயணத்தை தொடங்கியது
விழுந்த தேங்காய் …
அடர்ந்த வனம்
தன் இனத்தை தேடுகிறது
தொலைந்த ஆட்டுகுட்டி …
துளிர் விடும் விதை
சிறு விரிசல் கண்டது
பூமி ..!